இதே நாளில் அன்று

Added : ஆக 18, 2022 | |
Advertisement
ஆகஸ்ட் 19, 1931 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில், கோவிந்தசாமி மூப்பனார் - செல்லத்தம்மாள் தம்பதிக்கு மகனாக, 1931ல், இதே நாளில் பிறந்தவர் கருப்பையா. பெரும் பண்ணையாரான இவரின் பெயரை கூப்பிட விரும்பாத மக்கள், ஜி.கே.மூப்பனார் என்று அழைத்தனர்.சிறுவயதிலேயே காங்கிரசில் இணைந்த மூப்பனாருக்கு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தலைவர் பதவி,

இதே நாளில் அன்று


ஆகஸ்ட் 19, 1931



தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில், கோவிந்தசாமி மூப்பனார் - செல்லத்தம்மாள் தம்பதிக்கு மகனாக, 1931ல், இதே நாளில் பிறந்தவர் கருப்பையா. பெரும் பண்ணையாரான இவரின் பெயரை கூப்பிட விரும்பாத மக்கள், ஜி.கே.மூப்பனார் என்று அழைத்தனர்.
சிறுவயதிலேயே காங்கிரசில் இணைந்த மூப்பனாருக்கு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தலைவர் பதவி, 1965ல் கிடைத்தது. பின், தமிழக காங்கிரஸ் தலைவர், தேசிய பொதுச் செயலர் பதவிகள் தேடி வந்தன. ஒரு முறை தமிழக சட்டசபை காங்., தலைவராகவும், நான்கு முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பதவி வகித்தார். 1996ல், தமிழக காங்கிரசின் விருப்பத்துக்கு எதிராக, பிரதமராக இருந்த நரசிம்மராவ், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தார்.
இதனால், தமிழ் மாநில காங்கிரசை துவங்கினார்; அதில், பலர் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களாகினர். கட்சி துவங்கிய ஆறாவது ஆண்டில், 2001 ஆகஸ்ட் 30ல், தன், 7௦வது வயதில் ஜி.கே.மூப்பனார் காலமானார். ராஜிவால், தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.கே.மூப்பனாரின் பிறந்த தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X