சுண்ணாம்பு கொளத்தூர் ஏரி வழக்கு செங்கல்பட்டு கலெக்டருக்கு உத்தரவு

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சென்னை:'சுண்ணாம்பு கொளத்துார் ஏரி தொடர்பான வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25,000 ரூபாய் செலுத்த வேண்டும்' என, செங்கல்பட்டு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கத்தில் உள்ள சுண்ணாம்பு கொளத்துார் ஏரி, குப்பை கொட்டும் இடமாகவும், கழிவு நீர் சேகரிப்பு

சென்னை:'சுண்ணாம்பு கொளத்துார் ஏரி தொடர்பான வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25,000 ரூபாய் செலுத்த வேண்டும்' என, செங்கல்பட்டு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கத்தில் உள்ள சுண்ணாம்பு கொளத்துார் ஏரி, குப்பை கொட்டும் இடமாகவும், கழிவு நீர் சேகரிப்பு மையமாகவும் மாறியுள்ளது பற்றி, ௨௦௨௦, ஜூலை 1௫ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த, தீர்ப்பாயம், இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, செங்கல்பட்டு கலெக்டர், செயின்ட் தாமஸ் மவுன்ட் வட்டார வளர்ச்சி அதிகாரி, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், கூட்டுக்குழு ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, எந்தவொரு அரசு துறையும் தங்களது அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இது துரதிருஷ்டவசமானது.மாநில அரசு துறைகள், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தீர்ப்பாயத்தில் ஆஜரான வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, ஆக., 26-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.
அதற்குள் அரசு துறைகள் அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள், தங்களது சொந்த நிதியில் இருந்து, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.தீர்ப்பாயத்தின் உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை உறுதிப் படுத்தவும், பிரச்னையை ஆய்வு செய்யவும் தலைமை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 29-ல் நடைபெறும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X