ஹிந்துக்கள் பற்றி சர்ச்சை லியோனி மீது புகார்| Dinamalar

ஹிந்துக்கள் பற்றி சர்ச்சை லியோனி மீது புகார்

Added : ஆக 18, 2022 | |
சென்னை:ஹிந்துக்கள் மனம் புண்படும்படி சர்ச்சையாக பேசிய, தி.மு.க., பேச்சாளர் லியோனி மீது நடவடிக்கை கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, பாரிமுனையில் பாரத் ஹிந்து முன்னணி என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் மாநில செயலர் டில்லி பாபு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்து உள்ள புகார்:சென்னை கலைவாணர் அரங்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
ஹிந்துக்கள் பற்றி சர்ச்சை லியோனி மீது புகார்

சென்னை:ஹிந்துக்கள் மனம் புண்படும்படி சர்ச்சையாக பேசிய, தி.மு.க., பேச்சாளர் லியோனி மீது நடவடிக்கை கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, பாரிமுனையில் பாரத் ஹிந்து முன்னணி என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் மாநில செயலர் டில்லி பாபு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்து உள்ள புகார்:சென்னை கலைவாணர் அரங்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின், 60வது பிறந்த நாள் விழா நடந்தது. அதில் லியோனி பேசினார்.

அப்போது, ஹிந்துக்கள் யாகம் வளர்க்கும் முறை குறித்தும்,கல்லையும் கடவுளாக வணங்குவது குறித்தும் அவதுாறாக பேசியுள்ளார். ஹிந்துக்களின் யாகம், மிகவும் புனிதமானது; சக்தி வாய்ந்ததாக ஹிந்துக்கள் கருதுகின்றனர்; கல்லையும் கடவுளாக வணங்கும் ஒரே மதம், ஹிந்து மதம். எனவே, ஹிந்துக்களின் மனதை மிகவும் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ள லியோனி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தற்போது பதவி வகித்து வரும், பாடநுால் கழக தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X