பள்ளியில் சட்ட விழிப்புணர்வு:மாவட்ட நீதிபதி அட்வைஸ்| Dinamalar

பள்ளியில் சட்ட விழிப்புணர்வு:மாவட்ட நீதிபதி 'அட்வைஸ்'

Added : ஆக 18, 2022 | |
வால்பாறை:அரசு பள்ளி மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் கலந்து கொண்டு, மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, 'படிக்கும் வயதில் மாணவர்கள சட்டம் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். பள்ளியில் கட்டாயம்

வால்பாறை:அரசு பள்ளி மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் கலந்து கொண்டு, மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, 'படிக்கும் வயதில் மாணவர்கள சட்டம் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். பள்ளியில் கட்டாயம் மாணவர்கள் சட்ட விழிப்புணர்வு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். இலவச சட்ட உதவி மையம் குறித்து மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மலைப்பகுதி மாணவர்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்,' என்றார்.நிகழ்ச்சியில், வால்பாறை மாஜிஸ்திரேட் (பொ) ஸ்வேதாரண்யன், தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X