கிருஷ்ண ஜெயந்தி விழா:பள்ளிகளில் கோலாகலம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிகளில், நேற்று, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.நாடு முழுவதிலும் இன்று, கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நேற்று, பொள்ளாச்சி கோடங்கிபட்டி அரசு துவக்கப்பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. மாணவர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்தும், மாணவிகள் ராதை வேடம் அணிந்து அசத்தினர். கிருஷ்ணர் குறித்து ஆன்மிக
கிருஷ்ண ஜெயந்தி விழா:பள்ளிகளில் கோலாகலம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிகளில், நேற்று, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.நாடு முழுவதிலும் இன்று, கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நேற்று, பொள்ளாச்சி கோடங்கிபட்டி அரசு துவக்கப்பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. மாணவர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்தும், மாணவிகள் ராதை வேடம் அணிந்து அசத்தினர். கிருஷ்ணர் குறித்து ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பாடல்கள் பாடினர்.இதேபோல், எம்.எம்.எஸ்., பள்ளியில் மாணவர்கள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்தனர். மேலும், கிருஷ்ணரின் பத்து அவதாரங்களின் வேடம் அணிந்து அசத்தினர். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மனோகரன், செயலாளர் விஜயலட்சுமி, முதல்வர் கிரிஜா பங்கேற்றனர். ஆர்.வி.புதுாரில் சிறுவர்கள் கிருஷ்ணரின் அவதார வேடம் அணிந்து ஊரினுள் ஊர்வலமாக சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X