உரிய நேரத்தில் சத்துணவு வழங்கஅமைப்பாளர்களுக்கு 'அட்வைஸ்'

Added : ஆக 18, 2022 | |
Advertisement
வால்பாறை:மாணவர்களுக்கு மதிய உணவு உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என, சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி மேலாளர் சலாவுதீன் பேசியதாவது:மாணவர்களுக்கு தினமும் மதிய உணவின் போது, குடிக்க கொதிக்க வைத்த தண்ணீர் வழங்க வேண்டும். குறிப்பிட்ட
உரிய நேரத்தில் சத்துணவு வழங்கஅமைப்பாளர்களுக்கு 'அட்வைஸ்'

வால்பாறை:மாணவர்களுக்கு மதிய உணவு உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என, சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி மேலாளர் சலாவுதீன் பேசியதாவது:மாணவர்களுக்கு தினமும் மதிய உணவின் போது, குடிக்க கொதிக்க வைத்த தண்ணீர் வழங்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சத்துணவு மையத்திற்கு செல்ல வேண்டும். ஏதாவது குறைபாடு இருந்தால் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும்.கெட்டுப்போன முட்டைகளை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது. சத்துணவை சுகாதாரமான முறையில் தயாரித்து, உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். விடுப்பு எடுக்கும் முன் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும்.மையங்களில் இருக்கும் உணவு பொருட்களின் இருப்பு பற்றிய விபரங்களை, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். சத்துணவு வழங்குவதில் ஏதேனும் முறைகேடு நடந்தால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X