தண்ணீர் பிரச்னையில் தவித்தது விடுதி :கிணறு தோண்டி தீர்வு கண்டார் வார்டன்

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆதிதிராவிடர் நலமாணவர் விடுதியில் உள்ளவர்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண தன் உடல் உழைப்பால் வார்டனே கிணறு தோண்டி குடிநீர் வழங்கியுள்ளார்.சாயல்குடி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 55 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியில் காவிரி குடிநீர் இணைப்பு இல்லாததால் குடிநீர் சமையல்
தண்ணீர் பிரச்னையில் தவித்தது விடுதி :கிணறு தோண்டி தீர்வு கண்டார் வார்டன்

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆதிதிராவிடர் நலமாணவர் விடுதியில் உள்ளவர்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண தன் உடல் உழைப்பால் வார்டனே கிணறு தோண்டி குடிநீர் வழங்கியுள்ளார்.

சாயல்குடி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 55 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியில் காவிரி குடிநீர் இணைப்பு இல்லாததால் குடிநீர் சமையல் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக டேங்கர் லாரி தண்ணீரை விலைக்கி வாங்கி வந்தனர். விடுதியில் வார்டனாக கதிரேசன் 36 பணியாற்றுகிறார். 55 மாணவர்கள் வார்டன் சமையலர் துப்புரவு பணியாளர் உள்ளிட்டோருக்கான தண்ணீர் தேவைக்காக நாள்தோறும் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்குவதை தவிர்ப்பதற்காக புதிய முயற்சியில் இறங்கினார் வார்டன் கதிரேசன். தண்ணிருக்காக விடுதிக்குள் கிணறு தோண்ட முடிவு செய்தார். அந்த முயற்சியில் அவரே களம் இறங்கி கிணறு தோண்டினார்.

கதிரேசன் கூறியதாவது:இப்பகுதியில் நிலத்தடி நீரில் அதிக உவர்ப்பு தன்மை உள்ளது. இருந்தாலும் மாணவர்களின் அன்றாட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நாமே கிணறு தோண்டினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. என்னுடன் வேலை பார்க்கும் சக பணியாளர்களிடம் இதை தெரிவித்தேன். அவர்களும் எனது முயற்சிக்கு ஆதரவு கரம் நீட்டினர். இதையடுத்து வேலை நேரம் போக கிடைக்கும் ஓய்வு நேரத்தில் விடுதி வளாகத்தில் உள்ள இடத்தில் கிணறு தோண்டும் பணியை ஆக.3ல் துவக்கினேன். 4 அடி அகலத்தில் 23 அடி ஆழத்தில் நல்ல குடிநீர் ஊற்று கிடைத்தது. இதனை எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறோம்.

இப்போது விடுதி மாணவர்களுக்கு தேவையான குடிநீர் சமையல் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் தண்ணீர் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மாள் கூறியதாவது: வார்டன் கதிரேசன் செயல் பாராட்டுக்குரியது. இது குறித்து கலெக்டர் ஜானி டாம் வர்கிஸிடம் தெரிவித்தேன். 75வது சுதந்திர தின விழாவில் வார்டன் கதிரேசனுக்கு பாராட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.விடுதி மாணவர்களுக்காக கிணறு தோண்டிய வார்டனின் செயல் சாயல்குடியில் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
19-ஆக-202215:02:08 IST Report Abuse
duruvasar தலைவர் சொன்ன நமக்கு நாமே திட்டம் இதுதான். இப்படி அரசு செய்யவேண்டிய பணிகளை மக்கள் தாமாகவே செய்து கொண்டு 7 வது நிதி கமிசன் பரிந்துரை படி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்கவும், அரசுக்கு மீதமாகும் பணதில் இலவசங்கள் வழங்கவும் மக்கள் வழிவகை செய்யவேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஆக-202213:33:05 IST Report Abuse
Bhaskaran வட்டி தொழில் செய்து வரும் வாத்தியார்கள் மத்தியில் இப்படி ஒரு நல்லவர்
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
19-ஆக-202210:53:26 IST Report Abuse
அசோக்ராஜ் யப்பா ... என்ன ஒரு புண்ணிய காரியம்? வாழ்க ... வளர்க ... 🙏
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X