இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாதுஅ.தி.மு.க., வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : ஆக 18, 2022 | |
Advertisement
புதுடில்லி:'அ.தி.மு.க., தலைமையகத்திற்கு உரிமை கோரும் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை

புதுடில்லி:'அ.தி.மு.க., தலைமையகத்திற்கு உரிமை கோரும் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமையகத்தில் பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் வெடித்தது.


மேல்முறையீடு

இதையடுத்து, ஆர்.டி.ஓ., எனப்படும் மண்டல வருவாய் அதிகாரி, கட்சி தலைமையகத்துக்கு 'சீல்' வைத்தார். இதை எதிர்த்து பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.மனுவை விசாரித்த நீதிமன்றம், அ.தி.மு.க., அலுவலக சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது:அ.தி.மு.க., விவகாரத்தில் ஜூன் 23க்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அலுவலக சாவி

எனவே, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் தொடர்கிறார். அந்த வகையில், தலைமையகத்தை உரிமை கோரும் அதிகாரம் அவருக்கு உள்ளது. எனவே, அலுவலக சாவியை அவரிடம் வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
'இந்த வழக்கில் விசாரணை நடத்தாமல், பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட் அபராதம்!


அ.தி.மு.க.,வில் பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையிலான கருத்து வேறுபாடு சரியாகும் வரை, மாநில அமைதியை கருத்தில் வைத்து, இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, முழுக்க முழுக்க விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் பி.ஏ.ஜோசப் என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். மனுதாரரை கடுமையாக கண்டித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்ததோடு, மேலும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X