மண்ணெண்ணெய் விற்பனை மையத்தில் நிழற்கூரை ஏற்படுத்த மக்கள் வலியுறுத்தல்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் உள்ள மண் ணெண்ணெய் வழங்கும் நிலையத்திற்கு, நிழற்கூரை வசதி ஏற்படுத்த வேண்டும் என, ரேஷன்கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிமிடெட் சார்பில், காஞ்சிபுரம் வையாவூர் சாலையில், மண்ணெண் ணெய் வழங்கும் நிலையம் உள்ளது.இங்கு, வையாவூர், மாமல்லன் நகர், கிழக்கு ராஜ
மண்ணெண்ணெய் விற்பனை மையத்தில் நிழற்கூரை ஏற்படுத்த மக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் உள்ள மண் ணெண்ணெய் வழங்கும் நிலையத்திற்கு, நிழற்கூரை வசதி ஏற்படுத்த வேண்டும் என, ரேஷன்கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிமிடெட் சார்பில், காஞ்சிபுரம் வையாவூர் சாலையில், மண்ணெண் ணெய் வழங்கும் நிலையம் உள்ளது.இங்கு, வையாவூர், மாமல்லன் நகர், கிழக்கு ராஜ வீதி, மின் நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான ரேஷன் கார்டுதாரர்களுக்கு, சுழற்சி முறையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், ரேஷன்கார்டு தாரர்கள் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக, பில் போடுவதற்கு வரிசையில் நிற்கும் இடத்தில் நிழற் கூரை இல்லை.அதேபோல், பில் வாங்கிவிட்டு, மண்ணெண் ணெய் வாங்கும் இடத்தி லும், நிழற்கூரை இல்லை.இதனால், பில் போடும் போதும், மண்ணெண் ணெய் வாங்கும்போதும் வரிசையில் நிற்கும் கார்டுதாரர்கள் வெயில், மழையில்நிற்க வேண்டி உள்ளது.

இதில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், முதியோர் வெயிலில் நிற்க முடியாமல் அவதிப்படு கின்றனர்.மேலும், மின் தடை ஏற்படும் போது, மண்ணெண்ணெய் பம்பை இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால், மின் தடை நேரங்களில் கார்டுதாரர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, வையாவூர் சாலையில் இயங்கும் மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்திற்கு ஜெனரேட்டர் வசதியும், பில் போடும் இடத்திலும், மண்ணெண்ணெய் வழங்கும் இடத்திலும், நிழற்கூரை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X