சரக்கு வாகனமாக மாறும் அரசு பஸ்கள்; வசூல் நோக்கத்தால் பயணிகள் பாதிப்பு

Added : ஆக 18, 2022 | |
Advertisement
அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்றுவோர், பள்ளி, கல்லுாரி மாணவர்களில் பலர் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தினமும் ராமநாதபுரம் வந்து செல்கின்றனர். இவர்கள் வசதிக்காக காலையில் மதுரை-ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ்கள் மதுரை எம்.ஜி.ஆர்., பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.இந்த பஸ்களில் ராமநாதபுரத்திற்கு பூ மூடைகளை வியாபாரிகள் ஏற்றுகின்றனர்.
அரசு பஸ்கள், சரக்கு வாகனம், பஸ் பயணிகள், Government buses,  bus passengers,

அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்றுவோர், பள்ளி, கல்லுாரி மாணவர்களில் பலர் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தினமும் ராமநாதபுரம் வந்து செல்கின்றனர். இவர்கள் வசதிக்காக காலையில் மதுரை-ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ்கள் மதுரை எம்.ஜி.ஆர்., பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

இந்த பஸ்களில் ராமநாதபுரத்திற்கு பூ மூடைகளை வியாபாரிகள் ஏற்றுகின்றனர். மதுரை மார்க்கெட்டில் மொத்தமாக பூக்களை வாங்கிஅரசு பஸ்கள் மூலம் ராமநாதபுரம், ராமேஸ்வரத்திற்கு கொண்டு செல்கின்றனர். இதனால் காலை நேரத்தில் பஸ்சில் பூ மூடைகள் முழுமையாகபஸ்சை ஆக்கிரமித்து விடுகின்றன. சீட்டுகளில் பூ மூடைகளை அடுக்கி விடுவதால்பயணிகளுக்கு இடமில்லை, ஏறாதீர்கள் என்று அனுமதி மறுக்கின்றனர்.

இடம் கிடைக்காமல் அலுவலர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நின்று கொண்டு பயணித்தாலும் மூடைகளால் ஏறி, இறங்குவதற்கும் சிரமப்படும் நிலை உள்ளது. சரக்கு வாகனம் போல லாபநோக்கில் அதிகளவில்பூ மூடை ஏற்றுவதை தடுக்க வேண்டும். இருக்கைகளில் அமர பயணிகளுக்கு கண்டக்டர், டிரைவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும். அதற்கு போக்குவரத்து அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.

பயணிகள் கூறுகையில்,'ஒன் டூ ஒன், ஒன் டூ திரி, பை-பாஸ் ரைடர் பஸ்களில் பூ முடைகளை ஏற்றுகின்றனர்.சேவை நோக்கில் செயல்படவேண்டிய அரசு பஸ்களில் வசூல் ஆசையால் தினமும் பயணிகள் சிரமப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்கள், அமாவாசை, முகூர்த்த நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். பயணிகளுக்கு முக்கியத்துவம் தர போக்குவரத்து கழக அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X