மின் கம்பங்களால் உயிர்பலி அபாயம் ஃ வளசை மண்டல கவுன்சிலர் குற்றச்சாட்டு

Added : ஆக 18, 2022 | |
Advertisement
வளசரவாக்கம், 'வளசரவாக்கம் மண்டலத்தில், மின் கம்பங்கள் எந்நேரமும் உடைந்து விழும் நிலையில் உள்ளதாகவும், மின் வாரிய ஊழியர்கள், மக்கள் உயிருடன் விளையாடுகின்றனர்' எனவும், வளசரவாக்கம் மண்டல கூட்டத்தில், கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.வளசரவாக்கம் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் ராஜன் தலைமையில், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று


வளசரவாக்கம், 'வளசரவாக்கம் மண்டலத்தில், மின் கம்பங்கள் எந்நேரமும் உடைந்து விழும் நிலையில் உள்ளதாகவும், மின் வாரிய ஊழியர்கள், மக்கள் உயிருடன் விளையாடுகின்றனர்' எனவும், வளசரவாக்கம் மண்டல கூட்டத்தில், கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.வளசரவாக்கம் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் ராஜன் தலைமையில், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், 146வது வார்டு கவுன்சிலர் சண்முகம் பேசியதாவது:ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகரில் 15க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு, பல மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது.இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும், வார்டு முழுதும், 70க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதம்அடைந்துள்ளன. இவை எந்நேரமும் சரிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த நிலைமை, அனைத்து வார்டுகளிலும் உள்ளன. உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும்முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.அதேபோல், 148வது வார்டு கவுன்சிலர் கிரிதரன் பேசியதாவது:நெற்குன்றத்தில் நேற்று முன்தினம் 15 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அவர்களுக்கு மத்திய - மாநில அரசு மானியத்தில் 5 லட்சம் ரூபாய்க்கு வீடு வழங்குவதாக தெரிவித்து உள்ளனர். ஆனால், அதையும் கட்ட முடியாத நிலையில் பலர் உள்ளனர். அவர்களுக்கு வீடு வழங்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X