அகில இந்திய கிரிக்கெட் போட்டிஎஸ்.ஆர்.எம்., அணிகள் அபாரம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சென்னை, அகில இந்திய கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், 24 அணிகள் பங்கேற்று, பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், அகில இந்திய கல்லுாரிகளுக்கு இடையிலான அழைப்பிதழ் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.நேற்று துவங்கிய கிரிக்கெட் போட்டியில், சாய்ராம், லயோலா, எஸ்.ஆர்.எம்., - கிரசன்ட் பல்கலை, வி.ஐ.டி., உட்பட மொத்தம் 24
அகில இந்திய கிரிக்கெட் போட்டிஎஸ்.ஆர்.எம்., அணிகள் அபாரம்

சென்னை, அகில இந்திய கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், 24 அணிகள் பங்கேற்று, பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், அகில இந்திய கல்லுாரிகளுக்கு இடையிலான அழைப்பிதழ் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.நேற்று துவங்கிய கிரிக்கெட் போட்டியில், சாய்ராம், லயோலா, எஸ்.ஆர்.எம்., - கிரசன்ட் பல்கலை, வி.ஐ.டி., உட்பட மொத்தம் 24 அணிகள் பங்கேற்று மோதின வருகின்றன. போட்டிகள் அனைத்து 'நாக் - அவுட்' முறையில் நடந்து வருகிறது.முதல் போட்டியில், சாய் ராம் மற்றும் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி அணிகள் மோதின. இதில், சாய் ராம் அணி, 18 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து, 112 ரன்களை எடுத்தது.அணியின் வீரர் கவுரி ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார்.விறுவிறுப்பான ஆட்டத்தில் அடுத்து களம் இறங்கிய எஸ்.ஆர்.எம்., அணி, 17.2 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து, 115 ரன்களை எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து, 155 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய எஸ்.ஆர்.எம்., ஈஸ்வரி பொறியியல் கல்லுாரி அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து, 83 ரன்களில் சுருண்டது. இதனால், 72 ரன்கள் வித்தியாசத்தில் காட்டாங்கொளத்துார் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X