சைதை மீன், இறைச்சி கடைகளில் ஆய்வுவிதிமீறிய வியாபாரிகள் மீது நடவடிக்கை

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சென்னை, சைதாப்பேட்டையில் விதிமீறிய மீன் மற்றும் இறைச்சி கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இது குறித்து, சென்னை 2ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் வெளியிட்ட செய்தி குறிப்பு:தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், கூடுதல் ஆணையர் உமாதேவி, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி ஆகியோர் உத்தரவின்படி, போலீஸ் பாதுகாப்புடன் சைதாப்பேட்டை மீன் சந்தை

சென்னை, சைதாப்பேட்டையில் விதிமீறிய மீன் மற்றும் இறைச்சி கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இது குறித்து, சென்னை 2ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் வெளியிட்ட செய்தி குறிப்பு:தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், கூடுதல் ஆணையர் உமாதேவி, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி ஆகியோர் உத்தரவின்படி, போலீஸ் பாதுகாப்புடன் சைதாப்பேட்டை மீன் சந்தை மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.இதில், முத்திரையிடாத மின்னணு தராசுகள், இதர எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.எனவே, வியாபாரிகள் தாங்கள் பயன்படுத்தும், எடையளவுகளை உரிய காலத்தில் மறுமுத்திரை யிட்டு. அதற்கான சான்றிதழை நுகர்வோர் பார்வைக்கு வைக்க வேண்டும்.இல்லையென்றால், 5,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல், பொட்டல பொருட்களில் உரிய அறிவிப்புகளான, தயாரிப்பாளர், பொட்டலமிடுபவர் பெயர், முகவரி, பொருளின் பெயர், எடை, எண்ணிக்கை, பொட்டலமிடப்பட்ட மாதம், ஆண்டு, அதிகபட்ச விற்பனை விலை இருக்க வேண்டும்.அதோடு, நுகர்வோர் புகார் தெரிவிக்க, பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற வேண்டும். இல்லையென்றால், விற்பனையாளர் மீது வழக்கு தொடுத்து, 5,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X