கூட்டு பலாத்கார வழக்கு கைதி மருத்துவமனையில் தப்பி ஓட்டம்| Dinamalar

கூட்டு பலாத்கார வழக்கு கைதி மருத்துவமனையில் தப்பி ஓட்டம்

Added : ஆக 18, 2022 | |
மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, கூட்டு பலாத்கார வழக்கில் சிக்கிய விசாரணை கைதி ஒருவர் தப்பினார்.ராமநாதபுரம் மாவட்டம், கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் பத்மேஸ்வரன், 23. இவர், மார்ச் 23ல், மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் இருந்த கல்லுாரி மாணவியை, இரு நண்பர்களுடன் சேர்ந்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தார்.இந்த

மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, கூட்டு பலாத்கார வழக்கில் சிக்கிய விசாரணை கைதி ஒருவர் தப்பினார்.

ராமநாதபுரம் மாவட்டம், கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் பத்மேஸ்வரன், 23. இவர், மார்ச் 23ல், மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் இருந்த கல்லுாரி மாணவியை, இரு நண்பர்களுடன் சேர்ந்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தார்.இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த பத்மேஸ்வரன் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.


போலீசார், 'கவனிப்பிற்கு' பின், மதுரை சிறையில் விசாரணை கைதியாக ஆறு வாரங்களுக்கு முன் அடைக்கப்பட்டார்.காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு வியாழனும், புற நோயாளியாக சிகிச்சை பெறுகிறார்.


நேற்று மதியம் 12:00 மணிக்கு, அவரை அரசு மருத்துவமனைக்கு ஆயுதப்படை போலீசார் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.அப்போது, போலீசாருக்கு போக்கு காட்டி, பத்மேஸ்வரன், 'எஸ்கேப்' ஆனார். அவரை தேடும் பணி நடக்கிறது.இவர் மீது, 11 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X