மூலப்பொருட்கள் தட்டுப்பாடு: சறுக்கும் சாரக்கயிறு தொழில்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் சாரக் கயிறு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலப்பொருள் பற்றாக்குறை, விலை குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.இப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கயிறு தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் பலவகை கயிறுகள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக சில
மூலப்பொருட்கள் தட்டுப்பாடு: சறுக்கும் சாரக்கயிறு தொழில்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் சாரக் கயிறு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலப்பொருள் பற்றாக்குறை, விலை குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கயிறு தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் பலவகை கயிறுகள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக சில ஆண்டுகளாக இத்தொழில் நஷ்டத்தை சந்தித்தது. சமீப காலமாக இப்பகுதியில் சாரக்கயிறு அதிக அளவில் தயார் செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.உயரமான கட்டடங்களில் வேலையில் ஈடுபடுபவர்கள் இவ்வகை கயிறுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

பிளாஸ்டிக் கயிறுகளை காட்டிலும் தேங்காய் நாரில் தயாரிக்கப்படும் கயிறுகளே அதிக பாதுகாப்பு தருவதால் இவ்வகை கயிறுகளுக்கு கிராக்கி உள்ளது. சிங்கம்புணரியில் 80 முதல் 120 அடி நீளம் வரை தயாராகும் சாரக்கயிறு கோவை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மொத்த வியாபாரிகள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.சிங்கம்புணரி பகுதியில் கயிறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலப்பொருள் கிடைக்காமலும் உரிய விலை கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X