'போக்குவரத்து துறையில் 30 சதவீத லஞ்சம் அதிகரிப்பு'

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சென்னை:''தமிழக போக்குவரத்து துறையில், கடந்த காலத்தை விட, தற்போது லஞ்சம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது,'' என, தமிழக அனைத்து 'எம் - சாண்ட்' மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வட மாவட்டங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கி உள்ளது. அதற்கான கவன ஈர்ப்பு
'போக்குவரத்து துறையில் 30 சதவீத லஞ்சம் அதிகரிப்பு'

சென்னை:''தமிழக போக்குவரத்து துறையில், கடந்த காலத்தை விட, தற்போது லஞ்சம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது,'' என, தமிழக அனைத்து 'எம் - சாண்ட்' மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வட மாவட்டங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கி உள்ளது. அதற்கான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.

அதில், கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் பேசியதாவது:விபத்துக்கு காரணமாக, லாரிகளில் அதிக பாரம் ஏற்றக் கூடாது என, 2004ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அனால், போக்குவரத்து துறை அதிகாரிகள், லஞ்சம் பெறுவதற்காகவே, அதிக பாரம் ஏற்ற கட்டாயப்படுத்துகின்றனர். இது, 'முதல்வரின் விபத்தில்லா தமிழகம்' என்ற கொள்கைக்கு எதிராக உள்ளது.

அந்த வகையில், 5,000 ரூபாய் வாங்கிய அதிகாரிகள், தற்போது, 50 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகின்றனர். இதனால், கடந்த காலத்தை விட தற்போது, 30 சதவீதம் லஞ்சம் அதிகரித்துள்ளது.தரமற்ற எம் - சாண்ட் தயாரிக்கும் 4,000 நிறுவனங்களை கட்டுப்படுத்தி, கனிம வளக் கொள்ளையை தடுக்க, 'இ - வே பாஸ்' முறையை அமல்படுத்த வேண்டும். அதிகளவில் மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X