சிறுமி கருமுட்டை விற்பனை நான்கு பேருக்கு 'குண்டாஸ்'

Added : ஆக 19, 2022 | |
Advertisement
ஈரோடு:ஈரோடில், 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்ற விவகாரத்தில், சிறுமியின் தாய் உள்ளிட்ட நான்கு பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.ஈரோடில், 16 வயது சிறுமியின் கருமுட்டையை, எட்டு முறை எடுத்து, ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருச்சி, திருப்பதி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் விற்று முறைகேடு நடந்தது.இது தொடர்பாக, சிறுமியின் தாய், பெயின்டரான அவரது வளர்ப்பு

ஈரோடு:ஈரோடில், 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்ற விவகாரத்தில், சிறுமியின் தாய் உள்ளிட்ட நான்கு பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடில், 16 வயது சிறுமியின் கருமுட்டையை, எட்டு முறை எடுத்து, ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருச்சி, திருப்பதி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் விற்று முறைகேடு நடந்தது.இது தொடர்பாக, சிறுமியின் தாய், பெயின்டரான அவரது வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்த ஜான் பெனடிக் ஆகியோர் மீது, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதில், சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் ஆகியோர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.பெண்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வளர்ப்பு தந்தை, கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுமியை இவர், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிந்தது.
இந்நிலையில், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈடுபட்ட நால்வரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு எஸ்.பி., மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு பரிந்துரை செய்தார்.அதை ஏற்று, நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு கலெக்டர் உத்தரவிட்டார்.நால்வரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான கலெக்டர் உத்தரவு நகல், அவர்களிடம் வழங்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X