குடும்ப தகராறில் பயங்கரம்17 வயது சிறுவன் படுகொலை

Added : ஆக 19, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, இரு குடும்பங்களுக்கு இடையே இருந்த முன்விரோத தகராறில், 17 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம்,பர்கூர் அருகே பாலேப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ராம் நகரை சேர்ந்தவர் குப்பு சாமி, 39; துாய்மை பணியாளர்.இவரது மகன் முருகேசன், 17; கூலிதொழிலாளி.இவரது வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர் பிரபு, 27. இவர்கள் குடும்பத்திற்கிடையே முன்
குடும்ப தகராறில் பயங்கரம்17 வயது சிறுவன் படுகொலை

கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, இரு குடும்பங்களுக்கு இடையே இருந்த முன்விரோத தகராறில், 17 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,பர்கூர் அருகே பாலேப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ராம் நகரை சேர்ந்தவர் குப்பு சாமி, 39; துாய்மை பணியாளர்.இவரது மகன் முருகேசன், 17; கூலிதொழிலாளி.
இவரது வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர் பிரபு, 27. இவர்கள் குடும்பத்திற்கிடையே முன் விரோதம் இருந்தது. ராம் நகரில், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.இரவு, 11:00 மணிக்கு ராம் நகர் சாலையில் நடந்து சென்ற சிறுவன் முருகேசனை வழிமறித்த பிரபு, இரும்பு கம்பியால் தாக்கினார்.
இதில், கீழே விழுந்த முருகேசனின் தலையில், கல்லை துாக்கி போட்டு கொலை செய்தார். பர்கூர் டி.எஸ்.பி.,மனோகரன், இன்ஸ் பெக்டர் சவிதா மற்றும் போலீசார் முருகேசனின் உடலை மீட்டனர்.கொலை தொடர்பாக, பிரபு, அவரது அண்ணன் திருப்பதி, 30, தாய் பொட்டுஅம்மாள், 50, ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X