மதுபான பார் உரிமம்டெண்டர் வழங்க தடை| Dinamalar

மதுபான 'பார்' உரிமம்'டெண்டர்' வழங்க தடை

Added : ஆக 19, 2022 | |
சென்னை:மதுபான 'பார்' உரிமம் வழங்குவதற்கான நடைமுறையை தொடர அனுமதித்த, சென்னை உயர் நீதிமன்றம், 'டெண்டர்' வழங்க தடை விதித்துள்ளது.மதுக் கடை அருகில் பார் நடத்த உரிமம் வழங்குவதற்கான டெண்டருக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, இம்மாதம் 2ம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தடை கோரி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமையாளர்கள்

சென்னை:மதுபான 'பார்' உரிமம் வழங்குவதற்கான நடைமுறையை தொடர அனுமதித்த, சென்னை உயர் நீதிமன்றம், 'டெண்டர்' வழங்க தடை விதித்துள்ளது.

மதுக் கடை அருகில் பார் நடத்த உரிமம் வழங்குவதற்கான டெண்டருக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, இம்மாதம் 2ம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தடை கோரி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது

தற்போது நாங்கள் பார் நடத்தும் இடங்களை, டெண்டர் எடுத்தவர்களுக்கு வழங்க வேண்டும் என, டாஸ்மாக் நிர்வாகம் வற்புறுத்துகிறது. எங்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் இடையில், இடத்துக்கான ஒப்பந்தம் எதுவும் இல்லை.இடத்தின் உரிமையாளருடன், நாங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அந்த இடத்தை மூன்றாம் நபருக்கு வழங்கும்படி, டாஸ்மாக் நிர்வாகம் எங்களை நிர்பந்திக்க முடியாது.

எனவே, டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும். டெண்டரை ரத்து செய்து, உரிமத்தை எங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.மனுக்களை, நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். டெண்டர் நடைமுறையை தொடரலாம்; டெண்டர் வழங்க கூடாது என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 30க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X