எந்த வளர்ச்சிப்பணியும் இல்லை.. ஊராட்சித்தலைவர்கள் புலம்பல்| Dinamalar

எந்த வளர்ச்சிப்பணியும் இல்லை.. ஊராட்சித்தலைவர்கள் புலம்பல்

Added : ஆக 19, 2022 | |
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் நடக்கும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்களை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் எந்த வளர்ச்சிப்பணியும் இல்லை என ஊராட்சித்தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களின் கீழ் 445 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி அமைப்புகளுக்கு 2020 ல் ஜனவரியில் புதிய தலைவர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 3 ஆண்டுகளாகியும்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் நடக்கும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்களை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் எந்த வளர்ச்சிப்பணியும் இல்லை என ஊராட்சித்தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களின் கீழ் 445 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி அமைப்புகளுக்கு 2020 ல் ஜனவரியில் புதிய தலைவர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 3 ஆண்டுகளாகியும் ஊராட்சி நிர்வாகத்திற்கு எந்த நிதியும் வழங்கப்படவில்லை.

வளர்ச்சித் திட்டப்பணிகளையும் செயல்படுத்த முடியவில்லை. ஊராட்சி நிர்வாகத்தில் மொத்தமாக இருந்த கணக்கு தற்போது பிரிக்கப்பட்டுள்ளது. கணக்கு 1 ல் ஊராட்சிக்கான பொது நிதியும், கணக்கு 2 ல் மின் கட்டணம், கணக்கு 3 ல் திட்ட நிதி, கணக்கு 7 ல் சம்பளக்கணக்கு, 9 வது கணக்கில் 15 வது நிதிக்குழு மானிய நிதி, என ஒன்பது தலைப்பில் கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தலைவர்களுக்கான பொது நிதிக்கு அதிகளவு நிதி வருவதில்லை. மின் கட்டண கணக்கில் 20 லட்ச ரூபாய்க்கு மேல் நிதி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.மற்ற திட்டப்பணிகள் அனைத்தும் பேக்கேஜிங் முறையில் வழங்கப்பட்டு விடுகிறது. கிராம ஊராட்சியில் தேர்வு பெற்ற ஊராட்சித்தலைவர்கள் அதிகாரத்தில் எந்த நிதியும் வழங்கப்படாததால் வளர்ச்சித்திட்டப்பணிகள் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.

ஊராட்சித்தலைவர்களுக்கு முன் அனைத்து ஊராட்சிகளும் தனி அலுவலர் பொறுப்பில் இருந்தது அப்போது வழங்கப்பட்ட நிதியில் 50 சதவீதம் கூட தற்போது வழங்கப்படவில்லை. கிராம ஊராட்சிகளில் நடத்தப்படும் கிராமசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தில் கூறப்பட்ட ஒரு பணிகள் கூட செய்ய முடியாத நிலையில் ஊராட்சி நிர்வாகங்கள் உள்ளன.

ஊராட்சி கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்ததாவது: 3 ஆண்டுகளாக கிராமசபை கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை கூட ஊராட்சித்தலைவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. ஊராட்சித்தலைவர்களின் நிலை நாளுக்கு, நாள் மோசமடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் மக்கள் அடுத்த முறை எங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஊராட்சித்தலைவர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X