கோவில் கடைகள் ஏலம்ரூ.77 லட்சம் கிடைத்தது

Added : ஆக 19, 2022 | |
Advertisement
திருப்போரூர்:திருப்போரூர் கந்த சுவாமி கோவில், பல்வேறு வகையான ஏலத்தில், 77.56 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, சென்னை, காஞ்சிபுரம் மட்டுமின்றி, தமிழகம் முழுதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.இங்கு, ஆண்டுதோறும் பல்வேறு கடைகளுக்கு ஏலம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான ஏலம் நடந்தது.காணிக்கை முடி சேகரித்தல் ஏலம் 59.22 லட்சம்

திருப்போரூர்:திருப்போரூர் கந்த சுவாமி கோவில், பல்வேறு வகையான ஏலத்தில், 77.56 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, சென்னை, காஞ்சிபுரம் மட்டுமின்றி, தமிழகம் முழுதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.இங்கு, ஆண்டுதோறும் பல்வேறு கடைகளுக்கு ஏலம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான ஏலம் நடந்தது.
காணிக்கை முடி சேகரித்தல் ஏலம் 59.22 லட்சம் ரூபாய்; தற்காலிக கடைகள் வரி வசூல் 88 ஆயிரம் ரூபாய்; ஆடு, கோழி சேகரிப்பு உரிமம் ஏலம் 2.01 லட்சம் ரூபாய்.வெள்ளி உரு விற்பனை உரிமம் ஏலம் 80 ஆயிரம் ரூபாய்; நெய் திரி விற்பனை உரிமம் ஏலம் 14.65 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
மொத்தம் 77.56 லட்சம் ரூபாய், கோவிலுக்கு வருவாயாக கிடைத்தது.பிரசாத கடை ஏலம், வாகன பாதுகாப்பு கட்டணம் ஏலம், சிதறு தேங்காய் உப்பு மிளகு சேகரிப்பு ஏலத்தில், யாரும் கேட்காததால், வேறு தேதியில் ஏலம் நடத்தப்படும் என கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X