ரியல் எஸ்டேட் மோசடி வழக்குஎதிர்தரப்பினர் புதிய மனு தாக்கல்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
கோவை:ரியல் எஸ்டேட் நிறுவனம், 2.97 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், எதிர் தரப்பு வக்கீல் சார்பில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.கோவை அருகேயுள்ள பேரூர், காளம்பாளையத்தில், 'செல்வஜெயம் புரமோட்டர்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தார், வீட்டு மனை மற்றும் புதிய வீடு கட்டித் தருவதாக கூறி 65 பேரிடம், 2.97 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, கோவை

கோவை:ரியல் எஸ்டேட் நிறுவனம், 2.97 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், எதிர் தரப்பு வக்கீல் சார்பில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.கோவை அருகேயுள்ள பேரூர், காளம்பாளையத்தில், 'செல்வஜெயம் புரமோட்டர்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தார், வீட்டு மனை மற்றும் புதிய வீடு கட்டித் தருவதாக கூறி 65 பேரிடம், 2.97 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, பங்குதாரர்கள் ஜெகதீஸ்வரன், விஜயகுமார் உட்பட நான்கு பேர் மீது, 2018ல் வழக்கு பதிவு செய்தனர். கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விரைந்து விசாரிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதன் பேரில், டான்பிட் கோர்ட்டில் சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு தரப்பு சாட்சிகள் அனைவரிடமும் குறுக்கு விசாரணைக்கு அனுமதி கோரி, எதிர் தரப்பு வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர். இதற்கு அரசு தரப்பினர், நேற்று பதில் மனு தாக்கல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X