விநாயகர் சதுர்த்தி விழாகூடுதல் டி.ஜி.பி., ஆய்வு| Dinamalar

விநாயகர் சதுர்த்தி விழாகூடுதல் டி.ஜி.பி., ஆய்வு

Added : ஆக 19, 2022 | |
கோவை:விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி., தாமரைக்கண்ணன் நேற்று கோவையில் ஆய்வு மேற்கொண்டார்.விநாயகர் சதுர்த்தி விழா, இந்தாண்டு ஆகஸ்ட் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுவதும், ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கம். இதற்கென செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை

கோவை:விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி., தாமரைக்கண்ணன் நேற்று கோவையில் ஆய்வு மேற்கொண்டார்.விநாயகர் சதுர்த்தி விழா, இந்தாண்டு ஆகஸ்ட் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுவதும், ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கம். இதற்கென செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., தாமரைக்கண்ணன் தலைமை வகித்தார்.மாநகர போலீஸ் கமிஷனர்கள், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களின் எஸ்.பி.,க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.சதுர்த்தி விழா முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊர்வலம் செல்லும் வழித்தடத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி., அறிவுரைகளை வழங்கினார்.தேவையான இடங்களில் கூடுதலான போலீசார், ஊர்க்காவல் படையினரை பணியில் ஈடுபடுத்துமாறும், அதிகாரிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி., அறிவுறுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X