முதல்வர் செல்லும் வழியெங்கும் வரவேற்புதி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
கோவை:கோவை வரும் முதல்வரை வரவேற்கும் வகையில், அவர் பயணிக்கும் வழி நெடுக வரவேற்பு அளிப்பது என்று, தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக முதல்வர் ஸ்டாலின், வரும் 23ம் தேதி மாலை கோவை வருகிறார். இரவு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர், மறுநாள் ஈச்சனாரி ரத்தினம் கல்லுாரி அருகே நடக்கும் அரசு விழாவில், 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை
முதல்வர் செல்லும் வழியெங்கும் வரவேற்புதி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

கோவை:கோவை வரும் முதல்வரை வரவேற்கும் வகையில், அவர் பயணிக்கும் வழி நெடுக வரவேற்பு அளிப்பது என்று, தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக முதல்வர் ஸ்டாலின், வரும் 23ம் தேதி மாலை கோவை வருகிறார். இரவு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர், மறுநாள் ஈச்சனாரி ரத்தினம் கல்லுாரி அருகே நடக்கும் அரசு விழாவில், 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.அன்று மாலை பொள்ளாச்சியில் நடக்கும், தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். திருப்பூர், ஈரோடு மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர், மீண்டும் 26ம் தேதி கோவை வருகிறார். அன்று பி.எஸ்.ஜி., நிறுவன பவள விழாவில் பங்கேற்கிறார்.இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் முதல்வருக்கு, சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்தது.நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், கோவை விமான நிலையம் முதல் நிகழ்ச்சிகள் நடக்கும் இடம் வரை, முதல்வர் செல்லும் பாதை முழுவதும் திரண்டிருந்து, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.மாவட்டம், நகரம், ஒன்றியம் வாரியாக நிர்வாகிகள், தொண்டர்கள், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில், திரண்டு வரவேற்பு அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், பையா கிருஷ்ணன், ராமச்சந்திரன், சேனாதிபதி, வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X