பசுமை மீது அதிகரிக்கும் நேசம்| Dinamalar

பசுமை மீது அதிகரிக்கும் நேசம்

Added : ஆக 19, 2022 | |
திருப்பூர்:உலகுக்கே ஆடை போர்த்தி அழகுபார்க்கும் பின்னல் நகர் திருப்பூருக்கு, பசுமைப் போர்வை போர்த்துவதற்காக, வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை செயல்படுத்திவருகிறது வெற்றி அமைப்பு. பசுமைப்புரட்சியில், ஏராளமான தன்னார்வலர்கள், அமைப்பினர் கரம்கோர்த்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள பொது இடம், கோவில், விவசாய காலியிடங்களில் பலன்தரும்
பசுமை மீது அதிகரிக்கும் நேசம்

திருப்பூர்:உலகுக்கே ஆடை போர்த்தி அழகுபார்க்கும் பின்னல் நகர் திருப்பூருக்கு, பசுமைப் போர்வை போர்த்துவதற்காக, வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை செயல்படுத்திவருகிறது வெற்றி அமைப்பு. பசுமைப்புரட்சியில், ஏராளமான தன்னார்வலர்கள், அமைப்பினர் கரம்கோர்த்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள பொது இடம், கோவில், விவசாய காலியிடங்களில் பலன்தரும் மரக்கன்றுகள் நட்டு, பாமரிக்கப்பட்டு வருகிறது.வெற்றிகரமாக ஏழு திட்டங்களை பூர்த்தி செய்துள்ள, 'வெற்றி' அமைப்பு, 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்குடன், வனத்துக்குள் திருப்பூரின் எட்டாவது திட்டத்தை துவக்கியுள்ளது.பசுமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும், ஆர்வமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால், இத்திட்டம் வேகமெடுத்துள்ளது.திருப்பூர் வடக்கு அவிநாசிபாளையத்தில், குப்புசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. 500 சந்தன மரம், 200 செம்மரம் என, மொத்தம் 700 மரக்கன்றுகள் நடப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர் - திட்டம் 8' துவங்கி மூன்று மாதங்களில், 63 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X