'வாக்காளர் பட்டியல்குளறுபடி களையுங்கள்'

Added : ஆக 19, 2022 | |
Advertisement
திருப்பூர்:''வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை களைய வேண்டும்'' என, ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.வாக்காளர் அடையாள அட்டையுடன் 'ஆதார்' எண் இணைப்பது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., பண்டரிநாதன் தலைமை வகித்தார். - தி.மு.க., - அ.தி.மு.க., - - இ.கம்யூ., - - மா.கம்யூ., - - பா.ஜ., -- காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர்
'வாக்காளர் பட்டியல்குளறுபடி களையுங்கள்'

திருப்பூர்:''வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை களைய வேண்டும்'' என, ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.வாக்காளர் அடையாள அட்டையுடன் 'ஆதார்' எண் இணைப்பது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., பண்டரிநாதன் தலைமை வகித்தார். - தி.மு.க., - அ.தி.மு.க., - - இ.கம்யூ., - - மா.கம்யூ., - - பா.ஜ., -- காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். ஆர்.டி.ஓ., பேசுகையில், கடந்த 1ம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. அரசியல் கட்சியினர், தங்கள் பகுதி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அனைவரும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க உதவ வேண்டும்,' என்றார்.''வாக்காளர் அட்டை -- 'ஆதார்' எண் இணைப்பில் நடைமுறை சிக்கல்கள் ஏராளம் உள்ளன. 'ஆதார்' எண் மற்றும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் உள்ளன. இவற்றை சரி செய்யாமல், இணைப்பதில் எந்த பயனுமில்லை. முதலில் குளறுபடிகளை சரி செய்யவேண்டும். வாக்காளர் அட்டை - - 'ஆதார்' இணைப்புக்காக யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என கோர்ட் தெரிவித்துள்ளது; இதை பின்பற்றவேண்டும்'' என, கட்சியினர் கருத்து தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X