நகையை இழந்தோம்; நிர்கதி ஆனோம்: வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள் கண்ணீர்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
பல்லடம்;பல்லடம் அடுத்த, கேத்தனுார், பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் சேகர் என்பவர் வாடிக்கையாளர்களின் நகைகளில் சில வளையங்களை துண்டித்து மோசடியில் ஈடுபட்டார்.நகைகளை இழந்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு போராடி வருகின்றனர். இது தொடர்பாக, தாசில்தார் நந்தகோபால் தலைமையில் ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இழப்பீடு கிடைக்காத நிலையில்,
நகையை இழந்தோம்; நிர்கதி ஆனோம்: வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள் கண்ணீர்

பல்லடம்;பல்லடம் அடுத்த, கேத்தனுார், பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் சேகர் என்பவர் வாடிக்கையாளர்களின் நகைகளில் சில வளையங்களை துண்டித்து மோசடியில் ஈடுபட்டார்.நகைகளை இழந்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு போராடி வருகின்றனர். இது தொடர்பாக, தாசில்தார் நந்தகோபால் தலைமையில் ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இழப்பீடு கிடைக்காத நிலையில், தற்போது புதிய பிரச்னை ஒன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. மோசடியால் பாதிக்கப்பட்டு வங்கி லாக்கரில் நகை வைத்துள்ளவர்கள், தங்கள் நகையை எடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று, வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.விவசாயிகள் கூறுகையில், ''நகைகளை இழந்ததுடன், கடந்த ஐந்து மாதமாக அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். வங்கி தரப்பில் இருந்து எந்த விதமான நம்பிக்கை கூறிய தகவலும் இல்லை. திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, நகை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.இதற்கிடையே, 70க்கும் மேற்பட்டவர்களின் கணக்கை பயன்படுத்திய சேகர், பல லட்சங்கள் மோசடி செய்துள்ளார். உரிய ரசீது இருந்தும், லாக்கரில் உள்ள நகையை கொடுக்காமல் வங்கியினர் இழுத்தடிக்கின்றனர். நகைகள் லாக்கரில் உள்ளதால் வட்டிக்கு மேல் வட்டியும் அதிகரித்து வருகிறது.வீட்டில் பாதுகாப்பு இல்லாததால் நகைகளை இங்கு வைத்தோம். இப்போது, வங்கி மீதான நம்பிக்கையே போய்விட்டது'' என்றனர்.''லாக்கரில் உள்ள நகைகளை எடுப்பது குறித்து நாளை தகவல் தெரிவிக்கிறோம்'' என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X