அசுர வேகத்தில் 'பறந்த' டவுன் பஸ்அலங்கார ரவுண்டானா மீது மோதல்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
அவிநாசி:அசுர வேகத்தில் சென்ற தனியார் டவுன் பஸ், கட்டுப்பாட்டை இழந்து, அலங்கார ரவுண்டானாவில் மோதியது.திருப்பூரில் இருந்து அவிநாசிக்கு, டி.எம்.டி., என்ற தனியார் டவுன் பஸ் (வழித்தட எண்:9) வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, கட்டுப்பாட்டை இழந்து, தியாகி சஞ்சீவ்ராவ் சர்க்கிள் மீது (அலங்கார ரவுண்டானா) மோதியது.வேகமாக வந்ததால், பல அடி துாரம் சென்ற பஸ்சின்
அசுர வேகத்தில் 'பறந்த' டவுன் பஸ்அலங்கார ரவுண்டானா மீது மோதல்

அவிநாசி:அசுர வேகத்தில் சென்ற தனியார் டவுன் பஸ், கட்டுப்பாட்டை இழந்து, அலங்கார ரவுண்டானாவில் மோதியது.திருப்பூரில் இருந்து அவிநாசிக்கு, டி.எம்.டி., என்ற தனியார் டவுன் பஸ் (வழித்தட எண்:9) வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, கட்டுப்பாட்டை இழந்து, தியாகி சஞ்சீவ்ராவ் சர்க்கிள் மீது (அலங்கார ரவுண்டானா) மோதியது.வேகமாக வந்ததால், பல அடி துாரம் சென்ற பஸ்சின் முன் 'ஆக்ஸில்' உடைந்தது. அதேநேரம் பஸ் இன்ஜினில் தீப்பிடித்தது. அருகிலேயே அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இருந்ததால் உடனடியாக தீ அணைக்கப்பட்டு, 30 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.பயணிகளை மீட்க, அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்கள் உதவினர். பஸ்ஸில் பயணம் செய்த ஒருவர் கூறுகையில், 'திருப்பூரில் இருந்தே டிரைவர் அதிவேகமாகவே பஸ்சை ஓட்டி வந்தார். கடைசியில், இங்கு விபத்தில் சிக்கி விட்டது,' என்றார்.புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அலங்கார ரவுண்டானா அமைக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், தனியார் பஸ் மோதியதில் பலத்த சேதம் அடைந்தது. விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X