ஆபத்தான மரங்களை அகற்ற அனுமதி:பட்டியல் வகை மரங்கள் வெட்டி விற்பனை| Dinamalar

ஆபத்தான மரங்களை அகற்ற அனுமதி:பட்டியல் வகை மரங்கள் வெட்டி விற்பனை

Added : ஆக 19, 2022 | |
பந்தலுார்:பந்தலுார் அருகே ஆபத்தான மரங்களை வெட்டும் அனுதியின் பேரில், நல்ல நிலையில் உள்ள பட்டியல் வகை மரங்கள் வெட்டப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.பந்தலுார் தாலுகாவுக்கு உட்பட்ட சாலை ஓரங்கள், குடியிருப்பு பகுதிகள், பள்ளிகளில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்ட அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். அதில், 23 பள்ளிகளில், பட்டியல் வகை அல்லாத, 59 மரங்களின் கிளைகளை
ஆபத்தான மரங்களை அகற்ற அனுமதி:பட்டியல் வகை மரங்கள் வெட்டி விற்பனை

பந்தலுார்:பந்தலுார் அருகே ஆபத்தான மரங்களை வெட்டும் அனுதியின் பேரில், நல்ல நிலையில் உள்ள பட்டியல் வகை மரங்கள் வெட்டப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.பந்தலுார் தாலுகாவுக்கு உட்பட்ட சாலை ஓரங்கள், குடியிருப்பு பகுதிகள், பள்ளிகளில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்ட அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். அதில், 23 பள்ளிகளில், பட்டியல் வகை அல்லாத, 59 மரங்களின் கிளைகளை வெட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை காரணமாக கொண்டு, குந்தலாடி பள்ளி வாகத்தில் இருந்த, பட்டியல் வகை மரங்களின் கிளையை வெட்டி 'மொட்டை' அடித்த கும்பல், சில அதிகாரிகள் துணையுடன் உள்ளூர் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்றுள்ளனர்.இந்த தகவல் அறிந்த ஆர்.டி.ஓ., சரவண கண்ணன், மரங்கள் வெட்டுவதை நிறுத்தி, விசாரணைக்கு உத்தரவிட்டார்.இந்நிலையில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில், மழையை காரணம் காட்டி நடக்கும் மரக்கடத்தல் குறித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க நிர்வாகி தியாகராஜா, வக்கீல் கணேசன் ஆகியோர், மாநில முதல்வர்; வனம் மற்றும் சூற்றுச்சூழல் செயலர் சுப்ரியா சாஹூ ஆகியோருக்கு புகார் மனுக்களை அனுப்பி உள்ளனர். மேலும், ஐகோர்டில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X