வேஸ்ட் பவுடருக்குள் புதைந்த வாலிபர் பலி

Added : ஆக 19, 2022 | |
Advertisement
திருப்பூர்:மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ேஷக் அப்துல் அசீம், 22. இவரது தம்பி ேஷக் சஜிமுதீன், 20 ஆகியோர், திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் தங்கி, கிரஷிங் யூனிட்டில் வேலை செய்து வந்தனர்.நேற்று அதிகாலை சகோதரர்கள் பணியில் ஈடுபட்டபோது, வேஸ்ட் பவுடர், டேங்க்கிற்குள் விழவில்லை. மெஷினை நிறுத்தி விட்டு, ேஷக் சஜிமுதீன் உட்பட இருவர், வேஸ்ட் பவுடரை மெஷினுக்குள் தள்ளி விட

திருப்பூர்:மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ேஷக் அப்துல் அசீம், 22. இவரது தம்பி ேஷக் சஜிமுதீன், 20 ஆகியோர், திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் தங்கி, கிரஷிங் யூனிட்டில் வேலை செய்து வந்தனர்.நேற்று அதிகாலை சகோதரர்கள் பணியில் ஈடுபட்டபோது, வேஸ்ட் பவுடர், டேங்க்கிற்குள் விழவில்லை. மெஷினை நிறுத்தி விட்டு, ேஷக் சஜிமுதீன் உட்பட இருவர், வேஸ்ட் பவுடரை மெஷினுக்குள் தள்ளி விட முயற்சித்தனர்.இருவரும் வேஸ்ட் பவுடருக்குள் தவறி விழுந்தனர். பணியில் இருந்தவர்கள், ஒருவரை காப்பாற்றி விட்டனர். ேஷக் சஜிமுதீன் வேஸ்ட் பவுடருக்குள் புதைந்தார். தொடர்ந்து, பவுடரை அப்புறப்படுத்தி விட்டு, அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பரிசோதனை செய்த டாக்டர்கள், ேஷக் சஜிமுதீன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமலும் பணி மேற்கொண்ட, சூப்பர்வைசர் மிர்னியாசுதீன் மீது வழக்குப்பதிவு செய்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X