உணவு பாதுகாப்பு துறை அலட்சியம்: ஹோட்டல்களால் நோயாளியாகும் மக்கள்

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னையில் மக்கள் பெருக்கம், ஹோட்டல்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, உணவு பாதுகாப்பு துறையை அரசு மேம்படுத்தாமல் உள்ளது. உணவு பாதுகாப்பு பணியாளர்கள் பெயரளவுக்கே உள்ள நிலையில், வேகமாகவும், பரவலாகவும், உறுதியாகவும் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு, அதிகாரமற்ற, பலவீனமான அமைப்பாக மாறியுள்ளது. இதனால் தரமற்ற, நோய் ஏற்படுத்தக்கூடிய உணவு விற்பனையை தடுக்க முடியாத
 உணவு பாதுகாப்பு துறை,  அலட்சியம், தனி கவனம் ,முதல்வர்

சென்னையில் மக்கள் பெருக்கம், ஹோட்டல்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, உணவு பாதுகாப்பு துறையை அரசு மேம்படுத்தாமல் உள்ளது. உணவு பாதுகாப்பு பணியாளர்கள் பெயரளவுக்கே உள்ள நிலையில், வேகமாகவும், பரவலாகவும், உறுதியாகவும் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு, அதிகாரமற்ற, பலவீனமான அமைப்பாக மாறியுள்ளது.

இதனால் தரமற்ற, நோய் ஏற்படுத்தக்கூடிய உணவு விற்பனையை தடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது போன்ற உணவுக்கூடங்களால் நோயாளிகள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெருந்தொகையை சுகாதாரத்துறை சுமக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளதாக, மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே, உடனடியாக, உணவு பாதுகாப்பு துறையில் முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்த வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம் 2006ல் உருவாக்கப்பட்டு, நாடு முழுதும் 2011 ஆக., 5ம் தேதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு துறையின் உட்பிரிவாக உணவு பாதுகாப்பு துறை செயல்படுகிறது.
மக்கள் தொகை பெருக்கத்துடன், ஹோட்டல்களில் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தன. தெருவுக்கு தெரு திடீர் உணவு விடுதிகள், தள்ளுவண்டி கடைகள் உருவாகின.
ஆனால், இவற்றை கண்காணிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறையை அரசு மேம்படுத்தவில்லை; போதுமான வசதிகளையும், அதிகாரங்களையும் அளிக்கவில்லை.
...


latest tamil news


இதனால், சைவம் மற்றும் அசைவ உணவுகள் தரம் குறைந்ததோடு, நோய் உருவாக்கும் உணவாகவும், சிலருக்கு உயிரை கொல்லும் விஷமாக மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் சென்னையில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோர் முதல் முதியவர்கள் வரை, சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு, ஹோட்டல் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது என, மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது:ஹோட்டல்களில் உணவின் ருசிக்காக சேர்க்கப்படும் ரசாயன பொருட்கள், கெட்டுப்போன இறைச்சியையும் ருசியேற்றி விற்பது, தரமற்ற எண்ணெய் பயன்பாடு போன்றவை, எதிர்காலத்தில் கடுமையான சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நோய்கள் பெருகும் போது, அதை கட்டுப்படுத்துவதற்கும், நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் சுகாதாரத்துறைக்கு பெரும் தொகை தேவைப்படும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த பிரச்னையில் இப்போதாவது விழித்துக் கொண்டு, தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஆனால்,பெயரளவுக்கு மட்டுமே செயல்படும் உணவு பாதுகாப்பு துறையை மேம்படுத்தாமல் இது சாத்தியமில்லை. இதற்கான நடவடிக்கைகளை, அரசு பெரிய அளவில் முன்னெடுக்கவில்லை.இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
...
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் உள்ளன. உணவு தரத்தை உறுதி செய்ய, ஒரு மாவட்ட நியமன அலுவலர், 19 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். ஒரு பணியிடம் காலியாக உள்ளது. ஒரு கோடிக்கு மேல் உள்ள மக்கள் தொகைக்கு, இந்த எண்ணிக்கை போதாது.

புகார் வந்தால் தான் சோதனை செய்கிறோம். உடனடியாக புறப்பட போதுமான வாகனங்களோ, உணவின் தரத்தை கண்டறிய போதுமான கருவிகளோ இல்லை. நியமன அலுவலருக்கு மட்டுமே வாகன வசதி உள்ளது. அதற்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு வசதி இல்லை. தினசரி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டாலும், முழுமையாக தரத்தை உறுதி செய்ய முடியாத நிலையே உள்ளது.


தற்போதைய சூழலில் 174 சதுர அடி கி.மீ., பரப்பளவை, 20 அலுவலர்களால் முழுமையாக பார்க்க முடியாத நிலை உள்ளது. எனவே, கூடுதலாக பணியிடங்களை உருவாக்கி, அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கான வாகன வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மழை நீர் வடிகால்வாய் பணிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரடி கவனம் செலுத்தியதால் மட்டுமே, பருவமழைக்கு முன், 80 சதவீத பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் நோய்களோடு மக்கள் போராடுவதை தடுக்க, முதல்வர் நேரடியாக தலையிட்டு விடுதிகளில் விற்கப்படும் உணவின் தரத்திலும் உரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்நோக்குகின்றனர்.


அதிகாரம் என்ன?


உணவு நிறுவனங்கள், ஹோட்டல்களுக்கு பதிவு மற்றும் உரிமம் வழங்கும் பணியை உணவு பாதுகாப்பு துறை மேற்கொள்கிறது. தினமும் 12 லட்சம் ரூபாய் வியாபாரம் ஆகக்கூடிய உணவு விடுதிகளுக்கு உரிமம் வழங்கப்படும், குறைவான தொகைக்கு வியாபாரம் செய்யும் விடுதிகள் பதிவு செய்யப்படும்.

உணவு விடுதிகளில் சுகாதார சீர்கேடு கண்டறியப்பட்டால், அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். உரிமம் பெற்ற ஹோட்டல்களாக இருந்தால், அவற்றின் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இதில், உணவை சாப்பிட்டு யாரேனும் உயிரிழக்க நேரிட்டால், அந்த வழக்கில், ஹோட்டல் உரிமையாளருக்கு அதிகபட்சம் 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.


கடும் நடவடிக்கை தேவை!தரமற்ற மற்றும் கலப்பட, ரசாயனம் கலந்த உணவால், தொற்றா நோய்களான சர்க்கரை நோய், பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு
உள்ளிட்டவை ஏற்படும்.
தற்போதைய சூழலில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பெரிய ஹோட்டல் முதல் சிறிய அளவிலான விடுதிகள் வரை, முதலில் நோட்டீஸ் தான் வழங்கப்படும். சமையல் அறை சுத்தப்படுத்தப்பட்ட பின், மீண்டும் வழக்கம்போல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எத்தனை முறை தவறுகள் செய்தாலும், இது மட்டுமே நடைமுறை.
'இந்த சாதாரண அணுகுமுறை மாற வேண்டும். தரமற்ற, கெட்டுப்போன உணவு மற்றும் கலப்பட உணவுகளை தயாரிக்கும் ஹோட்டல்கள் மீது கடுமையான அபராதம் விதித்தல், உரிமம் அல்லது பதிவை குறித்த காலத்துக்கு ரத்து செய்தல், உரிமையாளரை கைது செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கையே பலன் தரும்' என, நுகர்வோர் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


ஒருங்கிணைப்பு அவசியம்!சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளையும் ஒருங்கிணைத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை செயல்படும் வகையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளையும் இணைக்க வேண்டும். மேலும், மாநகராட்சி சுகாதார பணியாளர்களுடன் இணைந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும். அப்போது தான், முழுமையாக அனைத்து கடைகளையும் ஆய்வு செய்து கட்டுப்படுத்த முடியும்.
கமிஷன் பெறும் அதிகாரிகள்!

சென்னையில் பல அதிகாரிகள் உணவு தரத்தை உறுதி செய்வதற்கு கடுமையாக பணியாற்றி வருகின்றனர். அதேநேரம் உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த சிலர், ஹோட்டல்களில் கமிஷன் பெற்று, அவர்கள் செய்யும் தவறுகளுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர். இதுபோன்ற அதிகாரிகளை கண்டறிந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
19-ஆக-202212:47:58 IST Report Abuse
duruvasar திராவிட மாடல் ஆட்சி வந்தவுடன் எல்லோருக்கும் குஷியாகி விட்டது.
Rate this:
Cancel
19-ஆக-202209:55:47 IST Report Abuse
ராமகிருஷ்ணன் ஏற்கனவே ஓசி பிரியாணிக்கு தாக்குதல் நடத்தும் கூட்டம், திமுக அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அதை காரணம் காட்டி முழுமையாக கடைகளை சூறையாடி விடுவார்கள். நியாயமான லாபம் கிடைத்தால் போதும் என்று கடைக்காரர்கள் திருந்துங்கள்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-ஆக-202209:48:59 IST Report Abuse
Sampath Kumar இந்த துறை அதிகாரிகள் மற்ற துறை அதிகாரிகளை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று குற்ற சாட்டு உண்டு மற்ற துறைகளை விட இந்த துறை மக்களுக்கு முக்கியமான ஓன்று என்று இருப்பதால் இங்கே பண்ணாம புகுந்து விளையாடுகிறது அதிகாரிகள் நினைத்தால் ஒரே நெல்லில் அணைத்து கடைகளையும் மூடி விட முடியும் அனால் செய்யமாட்டார்கள் கேட்டால் ஆட்கள் பற்றாக்குறை போதிய ஆய்வு கூடம் இல்லை என்று சாக்கு போக்கு சொல்வார்கள் திருடனை பார்த்து திருந்தா வீட்டால் எப்படி திருட்டை ஒழிக்க முடியாது அது போல தான் ithu ஹோட்டலில் உண்பவர்கள் என்றைக்கு அதை கையி விடுகிறார்களோ அந்தரிக்கு தான் அவர்களுக்கு விமோசனம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X