ஆன்லைன் வாயிலாகவும் நல வாரியத்தில் உறுப்பினராகலாம்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
அன்னுார்:மத்திய அரசின் தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கான சிறப்பு முகாம் அன்னுார் தெற்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு உடனடியாக நல வாரிய அட்டை வழங்கப்பட்டது.'வாரியத்தில் உறுப்பினராக இணைவதன் வாயிலாக, நலவாரிய பயன்களை பெறலாம். ஆதார், ரேஷன் அட்டை ஆகியவற்றுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ சேர்த்து
ஆன்லைன் வாயிலாகவும் நல வாரியத்தில் உறுப்பினராகலாம்

அன்னுார்:மத்திய அரசின் தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கான சிறப்பு முகாம் அன்னுார் தெற்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு உடனடியாக நல வாரிய அட்டை வழங்கப்பட்டது.'வாரியத்தில் உறுப்பினராக இணைவதன் வாயிலாக, நலவாரிய பயன்களை பெறலாம். ஆதார், ரேஷன் அட்டை ஆகியவற்றுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ சேர்த்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தும் உறுப்பினராகலாம் என வருவாய் ஆய்வாளர்கள் நாகராஜ், அன்பழகன் ஆகியோர் தெரிவித்தனர்.வரும், 20ம் தேதி கோவில்பாளையத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், சர்க்கார் சாமக்குளம் உள் வட்டத்தைச் சேர்ந்த கோவில் பாளையம், இடிகரை பேரூராட்சிகள், கள்ளிப்பாளையம், வெள்ளானைப்பட்டி, அக்ரஹார சாமக்குளம், கொண்டையம் பாளையம், அத்திப்பாளையம், கீரணத்தம், வெள்ளமடை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X