அதிகாரிகள் பெயரில் புது மோசடி: டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரிக்கை

Added : ஆக 19, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை : 'உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பெயரை பயன்படுத்தி, மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதால், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது வீடியோ பதிவு: பிரபலமான நபர்கள் மற்றும் பெரிய அதிகாரிகளின் படங்களை, 'வாட்ஸ் ஆப்' முகப்பு படமாக வைத்து, அவர்களின் பெயரை பயன்படுத்தி, மர்ம கும்பல்
DGP, Sylendra Babu, Police

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : 'உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பெயரை பயன்படுத்தி, மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதால், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது வீடியோ பதிவு: பிரபலமான நபர்கள் மற்றும் பெரிய அதிகாரிகளின் படங்களை, 'வாட்ஸ் ஆப்' முகப்பு படமாக வைத்து, அவர்களின் பெயரை பயன்படுத்தி, மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. டி.ஜி.பி., கலெக்டர், எஸ்.பி., போன்ற உயர் அதிகாரிகள் பெயரில், அவர்களுக்கு கீழ் பணிபுரிவோரின் மொபைல் போன் எண்ணுக்கு அழைத்து, 'நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன். அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுகிறது. 'ஒரு கூப்பன் விலை 10 ஆயிரம் ரூபாய். 10 கூப்பன் வாங்கி அனுப்புங்கள். நான் அப்புறம் பணம் கொடுத்து விடுகிறேன்' என, கூறுவர்.

நீங்கள் பரிசு கூப்பன் அனுப்ப தெரியாது என கூறினால், உடனடியாக ஒரு 'லிங்க்' அனுப்புவர். அதை 'கிளிக்' செய்து, நீங்கள் 1 லட்சம் ரூபாய்க்கு, 10 கூப்பன் வாங்கி அனுப்பினால், 'இதுபோதாது இன்னும், 20 பரிசு கூப்பன் வேண்டும்' என, குறுஞ்செய்தி அனுப்புவர். இப்படி, 50 கூப்பன் வரை, அதாவது, 5 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ய முயற்சி செய்வர்.


latest tamil news



இப்படி யாராவது உங்கள் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி அல்லது 'வாட்ஸ் ஆப்' தகவல் அனுப்பினால், உடனடியாக, காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 100 மற்றும் 112க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உடனடியாக காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். அதில், 'ஆன்லைன்' மோசடி என்ற இடத்தை தொட்டாலே போதும்; 1930க்கு அழைப்பு போய் விடும். இதனால், உங்கள் பணத்தையாது காப்பாற்றி விடலாம்.

புதுவிதமான இந்த மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகிறோம். அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள், இந்த கும்பலிடம் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
19-ஆக-202210:22:52 IST Report Abuse
Kumar சைக்கிள் பெண்ட கூட நிமித்தலாம், ஆனால் விடியல் ஆட்சியில் இவர் பெண்ட கழட்டாம விடமாட்டார்கள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
19-ஆக-202209:13:49 IST Report Abuse
duruvasar தென்கச்சி சாமிநாதன் இல்லாத குறையை சைலேந்திரபாபு அய்யாவும், ஸ்டாலின் அய்யாவும் தினம் ஒரு தகவல் என நல்ல நகைச்சுவையுடன் வெகு சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள் .
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
19-ஆக-202209:00:56 IST Report Abuse
Neutral Umpire போட்டிருக்கிற படத்தை பார்த்தால் அலெக்ஸ் பாண்டியன் ஞாபகத்துக்கு வருதே ..
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
19-ஆக-202211:31:00 IST Report Abuse
sankarவயிறு பசிச்சா பழம் சாப்பிடுவான் அந்த அலெக்ஸ் பாண்டியன். பழம் சாப்பிடுவதேயா வேலையா வைச்சிருப்பான் இந்த டெலகுசு பாண்டியன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X