சின்ன சின்னதாய்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
ரத்த தான பிரசாரம்பங்கார்பேட்டையில் தாசில்தார் தயானந்தா, சைக்கிளில் மெகாபோன் மூலம் ரத்த தானம் செய்யுமாறு நேற்று பிரசாரம் செய்தார். பங்கார்பேட்டை மார்க்கெட் பகுதியில் அவர் கூறுகையில், ''நாட்டின் சுதந்திரத்துக்காக எத்தனையோ பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். ''அவர்கள் நினைவாக சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றுவது மட்டும் போதாது. ரத்த தானம் செய்ய வேண்டும்.
சின்ன சின்னதாய்

ரத்த தான பிரசாரம்பங்கார்பேட்டையில் தாசில்தார் தயானந்தா, சைக்கிளில் மெகாபோன் மூலம் ரத்த தானம் செய்யுமாறு நேற்று பிரசாரம் செய்தார். பங்கார்பேட்டை மார்க்கெட் பகுதியில் அவர் கூறுகையில், ''நாட்டின் சுதந்திரத்துக்காக எத்தனையோ பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். ''அவர்கள் நினைவாக சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றுவது மட்டும் போதாது. ரத்த தானம் செய்ய வேண்டும். தானத்தில் சிறந்தது ரத்த தானமாகும். பங்கார்பேட்டையில் வரும் 20ல் ஏழு இடங்களில் ரத்த தான முகாம் நடக்கிறது. தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும்,'' என்றார்.தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்புபங்கார்பேட்டையில் அரசுக்கு சொந்தமான சர்வே எண் 6ல் உள்ள நிலத்தை, தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனை கையகப்படுத்த கோரி, பசுமை சேனை அமைப்பினர் பங்கார்பேட்டை உதவி தாசில்தார் முத்தம்மாவிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார்.இலவச 3 சக்கர வாகனம்மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்கள் தேவைப்படுவோர், வரும் 30ம் தேதி வரை கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். கர்நாடகாவில் 10 ஆண்டுகள் வசித்து வருபவராக இருக்க வேண்டும். தாசில்தாரிடம், 'அபிடவிட்' பெற வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ், கட்டாயம் தேவை. அவர்கள் 20 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.வாஜ்பாய் நினைவு நாள்பங்கார்பேட்டையின் தொப்பனஹள்ளி கிராமத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. கிராமபிரமுகர்கள், பொதுநல அமைப்பினர் வாஜ்பாய் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.சாலை அபிவிருத்தி பணி துவக்கம்பேத்தமங்களா முதல் வி.கோட்டா வரையிலான முக்கிய சாலையை அபிவிருத்தி செய்ய, தொகுதி காங்கிரஸ்எம்.எல்.ஏ., ரூபகலா நேற்று ஆய்வு செய்தார். ''சாலையை அகலப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்; தொகுதி அபிவிருத்தி நிதியில் 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.பேத்தமங்களா -- கேசம் பள்ளி சாலை அபிவிருத்தி செய்யப்படும்,'' என உறுதியளித்தார்.'பாச்சா பலிக்காது'கோலார் மாவட்ட ம.ஜ.த., தலைவர் வெங்கட் ஷிவா ரெட்டி, சீனிவாசப்பூரில் நேற்று கூறியதாவது:கூட்டுறவு வங்கிகளுக்கு மத்திய அரசின் நபார்டு வங்கி மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வட்டி இல்லா கடனாக வழங்கப்படுகிறது. சீனிவாசப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் குமார், தேர்தலுக்காக வித்தை காட்டுகிறார். வங்கி கடனுதவி மூலம் ஓட்டு வங்கியை தயார்படுத்தி வருகிறார். அவரின் திட்டம் பலிக்காது. இதை மக்கள் நன்கு அறிவர். அவரால் தொகுதி அபிவிருத்தி அடையவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.'அர்த்தமுள்ள சுதந்திர தினம்'மாலுாரின் அப்பேன ஹள்ளியில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது.பா.ஜ.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் கவுடா பேசுகையில்,''சுதந்திர தின விழா என்றால் பள்ளிகளில் மட்டுமே கொடியேற்றி இனிப்பு வழங்கி விடுமுறை தருவர். ஆனால், இம்முறை நாடே கொண்டாடியது. அர்த்தபூர்வமான சுதந்திரத்தின் மகிமையை உலகறிய செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, மாலுார் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்,'' என்றார்.விளையாட்டு போட்டிமுல்பாகலில் தாலுகா அளவில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியை நேற்று சுயேச்சை எம்.எல்.ஏ., நாகேஷ் துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், ''மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் நன்கு படிக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். படிப்புடன் விளையாட்டிலும் கூட ஆர்வம் செலுத்த வேண்டும்.உடல் ஆரோக்கியத்துக்கும், சுறுசுறுப்புக்கும், விளையாட்டில் ஈடுபடுவதை விட சிறந்த மருந்து வேறெதுவும் இருக்காது. மன தைரியத்தை ஏற்படுத்தும். விளையாட்டில் மாணவர்கள் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும்,'' என்றார்.பழுதடைந்த மின் கம்பங்கள்ராபர்ட்சன்பேட்டை சுராஜ் மல் சதுக்கம் முதல் சல்டானா சதுக்கம் வரையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு, சாலை நடுவில் மின் கம்பங்களை நிறுவி, மின் விளக்குகளை அமைத்தனர். நகரின் அழகை வெளிப்படுத்தியது. அந்த கம்பங்கள் எல்லாம் துரு பிடித்து பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. ஆறு கம்பங்கள் கீழே விழுந்து விட்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்றும் ஒரு மின் கம்பம் விழுந்தது. மற்ற கம்பங்கள் எப்போது விழுமோ என தெரியவில்லை. அப்பகுதியினர் பீதியுடன் உள்ளனர்.பறக்கிறது தேசியக்கொடி!ஆகஸ்ட் 13 முதல் 15 வரையில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, தங்கவயலில் பட்டி தொட்டி எல்லாம் கொடிகள் ஏற்றப்பட்டன. இந்த கொடிகள் நேற்று இரவு வரை பறந்த வண்ணமே உள்ளன. அதை இறக்கி பத்திரப்படுத்த மக்கள் பிரதிநிதிகள், பொதுநல அமைப்பினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டுமென பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X