புற்றுநோயால் அவதிப்பட்ட நபர்; மகன், மனைவியுடன் தற்கொலை

Added : ஆக 19, 2022 | |
Advertisement
கோனனகுன்டே-புற்று நோயால் அவதிப்பட்ட நபர், மனைவி, மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மாண்டியா, மலவள்ளியை சேர்ந்த மகேஷ், 40, பெங்களூரின், கோனனகுன்டே, எஸ்.பி.எம்., லே -- அவுட்டில் வசித்தார். பெங்களூரு மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார். இவரது மனைவி ஜோதி, 35. இந்த தம்பதிக்கு, 8 வயதில் மகன் உள்ளார்.சமீப நாட்களாக, கடும் வயிற்று வலியால்



கோனனகுன்டே-புற்று நோயால் அவதிப்பட்ட நபர், மனைவி, மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மாண்டியா, மலவள்ளியை சேர்ந்த மகேஷ், 40, பெங்களூரின், கோனனகுன்டே, எஸ்.பி.எம்., லே -- அவுட்டில் வசித்தார். பெங்களூரு மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார். இவரது மனைவி ஜோதி, 35. இந்த தம்பதிக்கு, 8 வயதில் மகன் உள்ளார்.சமீப நாட்களாக, கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மகேஷ், மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்ட போது, அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. வலியும் நாளுக்கு நாள் அதிகரித்தது.தான் இறந்துவிட்டால், குடும்பம் பாதிப்படையும் என கலங்கினார். இதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள, தம்பதி முடிவு செய்தனர். நேற்று காலை மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த பின், தாங்களும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.மகேஷின் நண்பர், பலமுறை போன் செய்தும் எடுக்காததால், அவரது வீட்டுக்கு வந்தார். கதவை தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது, மகேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கோனனகுன்டே போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X