100 தொகுதியில் சுற்றுப்பயணம்: பா.ஜ., தலைவர்கள் முடிவு

Added : ஆக 19, 2022 | |
Advertisement
பெங்களூரு-முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் ஆகியோர் தனி தனியாக தலா, 50 தொகுதிகளில் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இப்போதில் இருந்தே கட்சியை பலப்படுத்துவதற்கு பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதற்காக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண்சிங் நேற்று முன்தினம் இரவு டில்லியில் இருந்து
100 தொகுதியில் சுற்றுப்பயணம்: பா.ஜ., தலைவர்கள் முடிவு



பெங்களூரு-முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் ஆகியோர் தனி தனியாக தலா, 50 தொகுதிகளில் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இப்போதில் இருந்தே கட்சியை பலப்படுத்துவதற்கு பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதற்காக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண்சிங் நேற்று முன்தினம் இரவு டில்லியில் இருந்து வந்தார். நேற்று காலை முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து, தேசிய அளவில் பதவி கிடைத்திருப்பதற்கு வாழ்த்து தெரிவித்தார்.பின், மல்லேஸ்வரம் கட்சி அலுவலகத்தில், கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். தேசிய அமைப்பு பொது செயலர் சந்தோஷ், மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், துணை தலைவர்கள் விஜயேந்திரா, நிர்மல் குமார் சுரானா உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பொது செயலர் மகேஷ் டெங்கினாய் கூறியதாவது:சட்டசபை தேர்தலில், 150 தொகுதிகளில் வெற்றி பெறுவதே பா.ஜ., இலக்கு. இதற்காக இப்போதிருந்தே தயாராகும் வகையில், ஒன்பது கட்டமாக கட்சியை பலப்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் ஆகியோர் தலைமையில் தனி தனியாக தலா, 50 தொகுதிகளில் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்வர். ஆரம்ப நாட்களில், தினமும் தலா இரண்டு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியில் சிறு, சிறு பிரச்னைகள் உள்ளன. அவற்றை சரி செய்துள்ளோம்.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் தேவையின்றி பேசக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி பேசியவர்களை நேரில் அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பா.ஜ., அரசின் மூன்று ஆண்டு சாதனை குறித்து, ஹுப்பள்ளி, பெங்களூரு, மங்களூரு, தொட்டபல்லாபூர், ஷிவமொகா, கல்யாண கர்நாடகாவின் இரண்டு நகரங்கள் என ஒன்பது இடங்களில் 'மக்கள் உற்சவம் மாநாடு' நடத்தி விளக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X