'டிவி' உரிமையாளர் என'அள்ளி விட்ட' சுகேஷ்

Added : ஆக 19, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி : 'பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திரசேகர் தன்னை 'சன் டிவி' உரிமையாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்' என நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கூறினார்.பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் நட்பில் இருந்த 'பாலிவுட்' நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜரானார்.
Sukesh Chandrashekar, Jacqueline Fernandez

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : 'பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திரசேகர் தன்னை 'சன் டிவி' உரிமையாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்' என நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கூறினார்.

பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் நட்பில் இருந்த 'பாலிவுட்' நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜரானார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:


latest tamil news



சுகேஷ் சந்திரசேகர் தன் பெயரை சேகர் ரத்ன வேலா என்றும், தன்னை சன் டிவி உரிமையாளர் மற்றும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மருமகன் என்றும் என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பழகினார். அவரை சென்னையில் இரண்டு முறை மட்டுமே சந்தித்துள்ளேன். மற்றபடி ஆறு மாதங்களாக போனில் மட்டுமே பேசி பழகினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான 'ரான்பாக்ஸி'யின் முன்னாள் இயக்குனர்களிடம் 215 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் டில்லி போலீசார் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது தவிர பல்வேறு மோசடி வழக்குகளும் சுகேஷ் மீது நிலுவையில் உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
19-ஆக-202208:29:44 IST Report Abuse
VENKATASUBRAMANIAN எவனாவது எதையாயாவதை சொன்னால் நம்பி விடுவதா. படித்தும். அறிவு இல்லையா.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஆக-202206:53:20 IST Report Abuse
Natarajan Ramanathan இரண்டே முறை சந்தித்ததிலேயே பல கோடி கறந்துவிட்ட சாகசம் வியப்பானது....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-202206:45:37 IST Report Abuse
Kasimani Baskaran இது போன்ற மொக்கையாக பொய் சொல்லுபவரளிடம் கூட ஏமாறும் அளவுக்கு மசாலா இருக்கிறது என்றால் அது மிக ஆபத்தானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X