அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

Added : ஆக 19, 2022 | |
Advertisement
திருக்கனுார்-செட்டிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசளிப்பு விழா நடந்தது.விழாவில், ஆசிரியை கவிதாமணி வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளியின்
அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

திருக்கனுார்-செட்டிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசளிப்பு விழா நடந்தது.விழாவில், ஆசிரியை கவிதாமணி வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளியின் பொறுப்பாசிரியர் முருகசாமி சிறப்புரை ஆற்றினார் ஆசிரியை இருசம்மாள் தொகுத்து வழங்கினார். விழாவில், ஓவியம், கோலம் மற்றும் மாறுவேடம் அணிதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஊர் முக்கிய பிரமுகர்கள் பரிசு வழங்கினர்.ஆசிரியை தேன்மொழி நன்றி கூறினார். ஏற்பாடுகளை செட்டிப்பட்டு கிராம இளைஞர்கள் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X