'டோலோ 650' மாத்திரை பரிந்துரைக்க ரூ.1000 கோடி செலவிட்ட நிறுவனம்

Added : ஆக 19, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி : நோயாளிகளுக்கு, 'டோலோ 650' மாத்திரையை பரிந்துரைக்கும் டாக்டர்களுக்கான ஊக்க தொகைக்காக அந்நிறுவனம் 1,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை அதிக அளவில்
dolo 650, doctors, Supreme Court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : நோயாளிகளுக்கு, 'டோலோ 650' மாத்திரையை பரிந்துரைக்கும் டாக்டர்களுக்கான ஊக்க தொகைக்காக அந்நிறுவனம் 1,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரில், விலை உயர்ந்து பரிசு பொருட்கள், வெளிநாட்டு பயணங்களுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கும் நடைமுறைக்கு, மருந்து தயாரிப்பு நிறுவனங்களை பொறுப்பாக்க வேண்டும்' என, கோரப்பட்டு இருந்தது.


latest tamil news


இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் வாதிடுகையில், ''காய்ச்சலுக்கு அளிக்கப்படும், 'டோலோ 650' மாத்திரைகளை நோயாளிகளுக்கு அதிக அளவில் பரிந்துரைப்பதற்காக, அந்நிறுவனம் 1,000 கோடி ரூபாய் பணத்தை டாக்டர்களுக்கான ஊக்கத்தொகைக்காக செலவிட்டுள்ளது,'' என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ''கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்ட போது கூட எனக்கு அந்த மாத்திரைகள் தான் பரிந்துரைக்கப்பட்டன. இது மிக தீவிரமான பிரச்னை. இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்,'' என, நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.இது தொடர்பாக, 10 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-202212:25:08 IST Report Abuse
ஆரூர் ரங் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்ட😛 டாக்டர்கள் உத்தமமான கடவுள்கள்?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-ஆக-202211:31:59 IST Report Abuse
Lion Drsekar முதலில் கோணல் முற்றிலும் கோணல். இன்று வெளியே தெரிந்தது டோலோ மட்டுமே இன்னமும் பல மருந்துகள், இயந்திரங்கள், சிகிச்சைகள், எல்லாமே கமிஷன், எங்கும் கமிஷன். இதற்க்கு முதுகெலும்பு மெடிக்ளைம், கம்பெனிகள் மற்றும் தனியார்கள் எடுத்திருக்கும் பாலிசிகள் இப்படி இருக்க இந்த தொழில் சிறப்பாகத்தானே இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
19-ஆக-202211:21:14 IST Report Abuse
ThiaguK லஞ்சத்தினால்தான் மக்கள் கடனாளியாக்கப்படு கிறார்கள் ....அதிகாரிகள் அரசியல்வாதிகள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் கைகளில் போதும் கோடிகள் மக்கள் தலையில் விழுகிறது இதுதான் உண்மை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X