'ஆன்லைன்' சூதாட்டம் தடை செய்ய அவசர சட்டம் இயற்ற ஆலோசனை

Added : ஆக 19, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் 'ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவது தொடர்பாகவும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஆன்லைன் விளையாட்டு தடை தொடர்பாக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு
Online Rummy, ban, CM Stalin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகத்தில் 'ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவது தொடர்பாகவும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

ஆன்லைன் விளையாட்டு தடை தொடர்பாக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.அந்த குழு அரசிடம் அளித்த அறிக்கை பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என 7ம் தேதி அரசு அறிவித்தது. அத்துடன் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.


latest tamil news



அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலரும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.


latest tamil news



சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தலைமைச் செயலர் இறையன்பு உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி டி.ஜி.பி. சைலேந்திரபாபு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சட்டத் துறை செயலர்கள் கார்த்திகேயன் கோபி ரவிகுமார் கலந்து கொண்டனர்.அ தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்தும் மாநிலத்தில் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
19-ஆக-202212:43:29 IST Report Abuse
duruvasar இதெல்லாம் நம்ப வாக்குறுதியில் கொடுக்காதது. ஆகையால் எந்த அவசரமும் வேண்டாம். இன்னும் 3 1/2 ஆண்டுகள் மீதம் இருக்கிறது பார்த்துக்கலாம்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
19-ஆக-202212:11:39 IST Report Abuse
raja இன்னமும் ஆலோசனையிலதான் இருக்கானா....
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
19-ஆக-202209:36:44 IST Report Abuse
C.SRIRAM இந்த ஆன் லைன் சூதாட்டத்தை ஒழிக்க முடிந்தால் ஒழித்து விடவேண்டுயது தானே? இதெற்கென்ன ஆலோசனை கூட்டம்? வேறு முக்கியமான வேலைகள் ஏதும் இல்லையா? நேர விரயம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X