கனியாமூர் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

Added : ஆக 19, 2022 | |
Advertisement
விழுப்புரம்-கனியாமூர் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு விழுப்புரம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ம் தேதி இறந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்திகா ஆகியோர் கைது

விழுப்புரம்-கனியாமூர் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு விழுப்புரம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ம் தேதி இறந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் 5 பேரும் ஜாமின் கேட்டு விழுப்புரம் மகிளா சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி (பொறுப்பு) சாந்தி, முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மாணவி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, 'சிறையில் இருக்கும்போதே சி.சி.டி.வி., பதிவுகளை வெளியிட்டு பள்ளி நிர்வாகத்தினர் வழக்கை திசை திருப்ப பார்க்கின்றனர்.விசாரணை முழுமையடையாததால், ஜாமின் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க நேரிடும்' என ஆட்சேபனை தெரிவித்தார்.அதற்கு, பள்ளி தரப்பு வழக்கறிஞர்கள், 'மாணவர்களின் எதிர்கால கல்வி நலனைக் கருதி ஜாமின் வழங்க வேண்டும். ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். வழக்கை திசை திருப்பவில்லை' என்றனர்.இதையடுத்து, அரசு தரப்பு வழக்கறிஞர், 'சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணை முழுமை பெறவில்லை. ஜிப்மர் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. பள்ளி தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 29ம் தேதி நடக்கிறது. இதனால், ஜாமின் மனு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்' என்றார்.இந்த வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி 5 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம், தாய் செல்வி ஆஜராகினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X