கனியாமூர் கலவரம்: மேலும் 3 பேர் கைது

Added : ஆக 19, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மற்றும் காவலர்கள் மீது கல் எறிந்து தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர், சக்தி மெட்ரிக் பள்ளியில் கடந்த மாதம் 17ம் தேதி நடந்த கலவரத்தில் போலீஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும், பள்ளி பொருட்களையும் அடித்து நொறுக்கி
கனியாமூர் கலவரம்: மேலும் 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி-கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மற்றும் காவலர்கள் மீது கல் எறிந்து தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர், சக்தி மெட்ரிக் பள்ளியில் கடந்த மாதம் 17ம் தேதி நடந்த கலவரத்தில் போலீஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும், பள்ளி பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.இதுகுறித்து சிறப்பு புலனாய்வு போலீசார், விசாரணை நடத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.அதில், கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் வடக்கு தெருவைச் சேர்ந்த சீனு மகன் ரஞ்சித், 22; நடுத்தெருவைச் சேர்ந்த சேட்டு மகன் கோமதுரை, 22; ஆகியோர் பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியது தெரியவந்தது.அதேபோல் சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி நடுத்தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஆகாஷ், 21; போலீஸ் வாகனம் மற்றும் காவலர்கள் மீது கல் எறிந்து தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து சிறப்பு புலனாய்வு போலீசார் 3 பேரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X