காரைக்கால் பெண்ணிடம் ரூ.7 கோடி மோசடிமதுரை சிறையில் திருச்சி தம்பதி கைது:

Added : ஆக 19, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
காரைக்கால்- -முதலீடு செய்யும் பணத்திற்கு இரு மடங்கு பணம் தருவதாக கூறி,காரைக்காலில்பெண் உள்ளிட்ட இருவரிடம் ரூ.6.92 கோடி மோசடிசெய்த கும்பலை சேர்ந்த திருச்சி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி மாநிலம்,காரைக்கால், வலத்தெரு பட்டமாள் நகரை சேர்ந்தவர் சக்திவேல், பணி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி முருகேஸ்வரி,56; இவர்களது மகன்கள் வெளிநாட்டில் உள்ளனர்.இந்நிலையில்,
காரைக்கால் பெண்ணிடம் ரூ.7 கோடி மோசடிமதுரை சிறையில் திருச்சி தம்பதி கைது:

காரைக்கால்- -முதலீடு செய்யும் பணத்திற்கு இரு மடங்கு பணம் தருவதாக கூறி,காரைக்காலில்பெண் உள்ளிட்ட இருவரிடம் ரூ.6.92 கோடி மோசடிசெய்த கும்பலை சேர்ந்த திருச்சி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம்,காரைக்கால், வலத்தெரு பட்டமாள் நகரை சேர்ந்தவர் சக்திவேல், பணி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி முருகேஸ்வரி,56; இவர்களது மகன்கள் வெளிநாட்டில் உள்ளனர்.இந்நிலையில், கோட்டுச்சேரியை சேர்ந்த துர்காதேவி, திருச்சி பீம் நகர் சாகுல் அமீதுஉள்ளிட்ட நான்கு பேர்,கடந்த 2018ம் ஆண்டு, முருகேஸ்வரியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.அப்போது, திருச்சி மன்னார்புரத்தில் உள்ள 'எல்பின்.காம்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால், ஆறு மாதத்தில் இரட்டிப்பாக திரும்பி வரும் எனக் கூறினர்.மேலும், தாங்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறி, சிலஆவணங்களை காண்பித்தனர். அதனை நம்பிய முருகேஸ்வரி, முதல் கட்டமாக துர்காதேவியிடம் ரூ.3 லட்சத்திற்கான காசோலை கொடுத்தார்.அடுத்த சில தினங்கள் கழித்து, திருச்சி மன்னார்புரம் அழகர்சாமி,55; அவரது மனைவி பாபா அழகர்சாமி,50; அவரது சகோதரர் ரமேஷ்குமார்உள்ளிட்ட 7 பேர், முருகேஸ்வரியை சந்தித்தனர்.அவர்கள்,'நாங்கள்தான் 'என்பில்.காம்' நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள்.நிறுவனத்தில் மேலும் முதலீடு செய்யுங்கள்' எனகூறி, ரூ. 10 லட்சம் பெற்றுச்சென்றனர்.முருகேஸ்வரிதனது உறவினர் மற்றும் வங்கிகளில் கடன் வாங்கி,கடந்த 2021ம் ஆண்டு வரை, 22 பேரிடம் ரூ.5 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரத்து 639 கொடுத்து, முதலீடு செய்தார்.முதலீடு முதிர்வடைந்தும், வங்கி கணக்கில் பணம் வராததால் சந்தேகமடைந்தமுருகேஸ்வரி, தன்னை நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்திய துர்காதேவி மற்றும்'என்பில்.காம்'நிறுவனத்தாரிடம்,தான் முதலீடு செய்த பணத்தை கேட்டார்.அவர்கள், 'பணம் தர முடியாது' என கூறியதோடு,குடும்பத்தோடு எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி,வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிச் சென்றனர்.இதே கும்பல், திருநள்ளாறை சேர்ந்த விஜயகுமாரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.இதுகுறித்துமுருகேஸ்வரிகடந்த 7ம் தேதி அளித்த புகாரின் பேரில்,காரைக்கால்டவுன் இன்ஸ்பெக்டர்சிவக்குமார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார். அதில், முருகேஸ்வரியை மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த திருச்சி மன்னார்புரம் அழகர்சாமி, அவரது மனைவி பாபா, ஆகியோர் இதேபோன்ற மோசடி வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பது தெரிய வந்தது.அதன்பேரில், போலீசார் காரைக்கால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அழகர்சாமி, பாபா ஆகியோரை காவலில் எடுத்து வந்து நேற்று காரைக்கால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் லிஷி, மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், இருவரையும் மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
20-ஆக-202212:07:56 IST Report Abuse
Krishnamurthy Venkatesan மக்கள் எவ்வளவு ஏமாளியாக இருக்கிறார்கள். ஆறு மாதத்தில் பணம் எவ்வாறு ரெட்டிப்பாகும் என யோசிக்க தவறிவிட்டார்கள். பேராசை கண்ணை கட்டிவிட்டது.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-ஆக-202205:19:05 IST Report Abuse
NicoleThomson கண்ணை கட்டுதே
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
19-ஆக-202219:33:09 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy குற்றவாளி யார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X