போதை ஒழிப்பு விழிப்புணர்வு; மாணவர்கள் ஊர்வலம்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
ரிஷிவந்தியம்-அரியலுாரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கராபுரம் வட்ட நுகர்வோர் சங்கத் தலைவர் மணி தலைமை தாங்கினார். பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூர்யா, பள்ளி தலைமை ஆசிரியர் செல்லப்பன், நுகர்வோர் சங்க ஆலோசகர் சேஷ லட்சுமி குமார், முன்னாள் தலைமை ஆசிரியை பானுமதி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு; மாணவர்கள் ஊர்வலம்



ரிஷிவந்தியம்-அரியலுாரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கராபுரம் வட்ட நுகர்வோர் சங்கத் தலைவர் மணி தலைமை தாங்கினார். பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூர்யா, பள்ளி தலைமை ஆசிரியர் செல்லப்பன், நுகர்வோர் சங்க ஆலோசகர் சேஷ லட்சுமி குமார், முன்னாள் தலைமை ஆசிரியை பானுமதி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ரேவதி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர் தாசில்தார் பாண்டியன், டி.எஸ்.பி., பழனி ஆகியோர், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர். தொடர்ந்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்கப்பட்டது.பின், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்றனர். வருவாய் ஆய்வாளர் இளையராஜா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சீத்தாபதி, முன்னாள் தலைவர் தணிகாச்சலம், வி.ஏ.ஓ., ஆனந்த், நுகர்வோர் சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X