குடிநீர் இணைப்பு முறைகேடு புகார்; ஆயக்குடியில் மக்கள் போராட்டம்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
பழநி : பழநி ஆயக்குடி பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் முற்றுகை மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க பேரூராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் இடைத்தரகர்கள் அதிக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து

பழநி : பழநி ஆயக்குடி பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் முற்றுகை மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க பேரூராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் இடைத்தரகர்கள் அதிக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் அதன் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது. அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் குடிநீர் இணைப்புக்காக பணம் செலுத்தினர். அவர்கள் அனைவரும் பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று காலை பதிவு செய்ய குவிந்தனர். இதனால் பணியாளர்கள் திணறினர்.

புது விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படவில்லை. வழங்கப்பட்ட படிவங்களில் விண்ணப்ப எண் இல்லை என பொதுமக்கள் கூறினர்.வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதை நிர்வாகம் வெளிப்படையாக செயல்படுத்த கோரி பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் திண்டுக்கல் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X