'குழந்தைகளுக்கு புட்டிப்பால் வழங்குவதை தவிர்க்க வேண்டும்'

Added : ஆக 19, 2022 | |
Advertisement
தேனி : 'குழந்தை வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து தாய்ப்பாலில் மட்டுமே அதிகம் உள்ளதால், புட்டிப்பால் கொடுப்பதை தாய்மார்கள் தவிர்க்க வேண்டும்.' என, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் செ.ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் தொடர் கண்காணிப்பில் 7825 கர்ப்பிணிகள், 6592 பாலுாட்டும் தாய்மார்கள், பிறந்த குழந்தை முதல் 6 வயது குழந்தைகள்,

தேனி : 'குழந்தை வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து தாய்ப்பாலில் மட்டுமே அதிகம் உள்ளதால், புட்டிப்பால் கொடுப்பதை தாய்மார்கள் தவிர்க்க வேண்டும்.' என, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் செ.ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் தொடர் கண்காணிப்பில் 7825 கர்ப்பிணிகள், 6592 பாலுாட்டும் தாய்மார்கள், பிறந்த குழந்தை முதல் 6 வயது குழந்தைகள், சிறார்கள் 60,771 என மொத்தம் 75,188 பேரை தாய், சேய் நலனை உறுதிப்படுத்தும் பணியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நலப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.வளர்ச்சி பணிகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி 'பகுதிக்கு மாவட்ட திட்ட அலுவலர் பேசியதாவது:

இத்துறையின் நோக்கம் செயல்பாடு பற்றிமாவட்டத்தில் 9 வட்டாரங்களில் 1065 குழந்தைகள் நல மையங்கள் உள்ளன.ஒரு மையத்தில் தலா ஒரு பணியாளர், ஒரு உதவியாளர் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு மாதத்திற்கும் 12 பாடத்திட்டங்கள் மூலம் முன்பருவ கல்வியை குழந்தைகளுக்கு, வழங்குகிறோம். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளை உருவாக்குவதே துறையின் நோக்கம்.


விழிப்புணர்வு பணிகள் என்னமாதந்தோறும் முதல் திங்கள், மூன்றாம் திங்கள் கிழமைகளில் சமுதாயம் நிகழ்ச்சிகள் 5 தலைப்பின் கீழ் ஆரம்ப கால கர்ப்பிணிகளை வரவேற்றல், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களை பராமரித்தல், 6 மாதம் நிறைவடைந்த குழந்தைகளுக்கு இணை உணவு புகட்டுதல், முன்பருவ கல்வி கற்பித்தல், பொது சுகாதாரம் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என சமூகம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.


வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வுதுரித உணவுக்கு வளரிளம் பெண்கள் அடிமையாகிவிட்டனர். பள்ளி, கல்லுாரிகளில் தேவையான உணவு எடுப்பது இல்லை. அதன் விளைவாக ரத்தசோகை ஏற்படுகிறது. இதை தவிர்க்க எந்த காய்கறிகளில் எந்தளவு சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது குறித்து வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பள்ளி கல்லுாரிகளில் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை ஏற்ப பாரம்பரிய உணவு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. வளரிளம் பெண்களின் மாதவிடாய் கால பராமரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.


கர்ப்பிணிகள் கண்காணிப்பு பணிகள்பெண் கருத்தரித்தல் உறுதியான உடன் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல பரிந்துரைக்கிறோம். அங்கு கர்ப்பிணி என்பதற்கான 'பிக்-மி' எண் வழங்கப்படும். பின் குழந்தைகள் நல பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர். கர்ப்பிணிகளில் ரத்தசோகை பாதித்தவரை கண்டறிந்து பாதிப்பிற்கு முளை கட்டிய தானியங்கள் சாப்பிடுவதன் அவசியம் பற்றி கூறப்படும்.


பாலுாட்டும் தாய்மார்கள் கண்காணிப்பு குறித்துகுழந்தை பிரசவித்த நொடியில் இருந்து 180 நாட்கள் (ஆறு மாதம்) தாய்ப்பால் மட்டுமே வழங்க விழிப்புணர்வு வழங்குகிறோம். 181 வது நாள் முதல் தாய்மார்கள் குழந்தைகளுக்கு இணை உணவு வழங்க கூறுகிறோம். ஒரு பெண் கருவுற்ற நாளில் இருந்து 9 மாத பிரசவ காலம் (270 நாட்கள்), அதன் பின், குழந்தை பிறந்து இரண்டு ஆண்டு வரை என மொத்தம் 1000 நாட்கள் கண்காணிக்கப்படுவார். இதில் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகளின் முன்பருவ கல்வி முடிவு வரை கண்காணித்து வருகிறோம். திறன் மிக்க முன்பருவ கல்வி முறை பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த முறை இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இந்த மாதிரி கற்பிக்கப்படுவது இல்லை.


தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றிபிரசவித்து 180 நாட்கள் கட்டாயம் தாய்ப்பால் வழங்க வேண்டும். 2 ஆண்டுகள் வரை வழங்கலாம். தாய்ப்பால் வழங்கினால் முதல் குழந்தைக்கும், 2வது குழந்தைக்கு உள்ள இடைவெளி கிடைப்பதுடன், மாதவிடாய் சீராகும். பிரசவித்த தாய்மார்கள் பாலுாட்டும் காலம் கர்ப்ப தடைக்கான நாட்களாக கருதப்படுவதால் அடுத்த குழந்தைக்கான இடைவெளி கிடைக்கும். 2வது குழந்தைக்கான கருவுறுதலில் பிரச்னை இருக்காது. மேலும் பாலுணர்வில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை.

அதிக தாய்மார்கள் புட்டிப்பால் வழங்குகின்றனர். அதனை தவிர்க்க வேண்டும். தாய்ப்பாலில் மட்டுமே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தை பிறந்தது முதல் 2 நாட்கள் வரை சுரக்கும் 'கொலாஸ்ட்ரம்' எனும் சீம்பாலில்தான் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றன.

ஆறு மாதங்கள் தாய்ப்பால் வழங்கிய பின், குறைந்தபட்சம் தாய்பாலுடன் இணைந்த இணை உணவு வழங்க வேண்டும். குழந்தையின் மூளை, நரம்பு மண்டல வளர்ச்சி இதன் மூலமாக கிடைக்கும். கருத்தரித்த நாள் முதல் அந்த சிசுவுக்காகவே தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது. சுகப்பிரசவம் என்றால் அரை மணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பால் சுரந்துவிடும். இதனாலேயே தாய்க்கும் குழந்தைக்குமான உளவியல் ரீதியான தீண்டல், அரவணைப்பு, பாதுகாப்பு அனுசரணைகளை எப்படி செயற்கைப் பாலில் எதிர்பார்க்க முடியும். அதனால் தாய்மார்கள் கட்டாயம் புட்டிப்பாலை தவிர்க்க வேண்டும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X