பாரத் சேவாக் சமாஜ் விருது வழங்கும் விழா

Added : ஆக 19, 2022 | |
Advertisement
கடலுார்-மத்திய அரசின் அமைப்பும், ஐந்தாவது திட்டம் கமிஷனில் இடம்பெற்றுள்ள பாரத் சேவாக் சமாஜ் சார்பில், பட்டயம் வழங்குதல் மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.பாரத் சேவா சமாஜ், பல்வேறு தொழில் சார்ந்த பட்டய பயற்சி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கி, வழி நடத்துகிறது. இதில் மாற்று மருத்துவ பட்டய பயிற்சிக்கான வேந்தராக தி சுசான்லி குழும சேர்மன் டாக்டர் ரவி உள்ளார்.இதில்,
பாரத் சேவாக் சமாஜ் விருது வழங்கும் விழா



கடலுார்-மத்திய அரசின் அமைப்பும், ஐந்தாவது திட்டம் கமிஷனில் இடம்பெற்றுள்ள பாரத் சேவாக் சமாஜ் சார்பில், பட்டயம் வழங்குதல் மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.பாரத் சேவா சமாஜ், பல்வேறு தொழில் சார்ந்த பட்டய பயற்சி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கி, வழி நடத்துகிறது. இதில் மாற்று மருத்துவ பட்டய பயிற்சிக்கான வேந்தராக தி சுசான்லி குழும சேர்மன் டாக்டர் ரவி உள்ளார்.இதில், பல்வேறு சேவைப்பணிகளில் ஈடுபட்டுள்ள தென் இந்தியாவை சேர்ந்த 75 நபர்களுக்கு பாரத் சேவாக் சமாஜ் மூலமாக 'பாரத் சேவாக்' விருது வழங்கப்பட்டது.புதுச்சேரி கிரீன் பேலஸ் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு, தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் உஷாரவி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார். அவருக்கு 'பேச்செழுத்து சிற்பி' என்ற விருதை டாக்டர் ரவி வழங்கினார்.டாக்டர்கள் சென்னை ஜெயசந்திரன், பெங்களூரு முகம்மது இப்சுல்லா, கேரளா ஜீனா சித்திக் மற்றும் லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் அசோக்குமார் சோர்டியா, டாக்டர் அக்பர்கான், தமிழக, புதுவைக்கான ஹைகோர்ட் வழக்கறிஞர் காமேஷ்குமார், கோவை சுபா விளம்பர ஏஜென்சி மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியம், கடலுார் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க இணை செயலார் சிவக்குமார் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பட்டய பயிற்சி முடித்த 50 மாணவர்களுக்கு பட்டயம் வழங்கப்பட்டது. டாக்டர் சிவக்குமார் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X