சாராயம் கடத்திய7 பேர் கைது

Added : ஆக 19, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே சாராயம் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்து, 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தகரை ஊத்தங்கரை ஓடை அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 பைக்குகளில் சாராயம் கடத்தி வந்த நான்கு பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை அடுத்த



கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே சாராயம் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்து, 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தகரை ஊத்தங்கரை ஓடை அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 பைக்குகளில் சாராயம் கடத்தி வந்த நான்கு பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை அடுத்த கொடமாத்தியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் சாமிநாதன், 25; சீனுவாசன் மகன் குமார் ,25; ரவிச்சந்திரன் மகன் ஹரி, 22; தேவேந்திரன் மகன் சரவணன்,30; என தெரிந்தது. 4 பேரும் 7 லாரி டியூப்களில் தலா 50 லிட்டர் வீதம் 350 லிட்டர் சாராயம் கடத்தியதுதெரியவந்தது. உடன் 4 பேரையும் கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.சித்தலுார் பகுதியில் வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது குப்புசாமி மனைவி சின்னம்மாள், 60; கருப்பன் மகன் மணிகண்டன்,32; மாரிமுத்து மகன் கருப்பன், 22; ஆகியோர் வீட்டின் அருகேயும், வயல்வெளி பகுதியில் மறைத்து வைத்து சாராயம் விற்றது தெரியவந்தது. உடன், 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X