மின் கட்டண உயர்வு தொழில்களை முடக்கும்: மதுரை தொழிற் சங்க நிர்வாகிகள் குமுறல்

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
மதுரை : மின்கட்டண உயர்வு தொழில்களை முடக்கும் என கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நேற்று நடந்தது. பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.காற்றாலை மின்சாரம் சேமிக்க வழியில்லைதமிழ்நாடு
TNEB, electricity, EB, Madurai

மதுரை : மின்கட்டண உயர்வு தொழில்களை முடக்கும் என கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நேற்று நடந்தது. பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.



காற்றாலை மின்சாரம் சேமிக்க வழியில்லை


தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன்: காற்றாலை உற்பத்தி மின்சாரத்தை சேமிக்க வசதிகள் செய்யாததால் ரூ. 1900 கோடி இழப்பு என தெரிவிக்கப்ட்டுள்ளது. ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு 90 சதவீத மக்களின் சம்பளம் ஆண்டுதோறும் 6 சதவீதம் அதிகரிப்பதில்லை. எனவே ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்துவதை கைவிட வேண்டும்.

திரையரங்குகள், ஓட்டல்கள், பல்பொருள் அங்காடிகள், திருமண மண்டபங்கள், நோய் கண்டறியும், உடற்பயிற்சி மையங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8.05லிருந்து ரூ.9.50 ஆகவும், தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு உட்கட்டமைப்பு வசதிக்கு வளர்ச்சி கட்டணம் ஒரு இணைப்புக்கு ரூ.1400லிருந்து ரூ.2800 ஆக உயர்த்துவது ஏற்க முடியாதது. கட்டண உயர்வை கைவிட்டு மின் பகிர்மான கழகம் லாபம் அடையும் வகையில் செயலாற்ற வேண்டும்.



சிறு தொழில்கள் முடங்கும் அபாயம்


மடீட்சியா தலைவர் சம்பத்: சிறு, குறு நிறுவனங்களுக்கு இதுவரை 'பவர் பேக்டர்' கட்டுப்பாடு இல்லை. தற்போது குடிசைகள், வீடுகள் தவிர அனைத்து இணைப்புகளுக்கும் பவர் பேக்டர் உண்டு. இது குறித்து புரிதல் இல்லை. மின்சார தட்டுப்பாடு, மின்தடை உள்ள காலத்தில் 'பீக் ஹவர்' அமலானது. இந்த நேரத்தில் தொழில் நிறுவனங்கள் தங்கள் மின் பயன்பாட்டை குறைக்க கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டது.


latest tamil news



மின்சார தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் இம்முறை தேவையில்லை. இதுவரை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.35 ஆக இருந்த நிலையான கட்டணம் 20 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த கட்டணத்தை மின் பயன்பாட்டு கட்டணத்தில் கழிக்காமல் தனியாக வசூலிப்பது முறையல்ல. தற்போது மின் கட்டணம் ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்தப்படும் என்பதை எப்படி நிர்ணயித்தனர் என தெரியவில்லை. மின் கட்டண உயர்வு அமலானால் மக்கள் பாதிப்பர். சிறுதொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்படும். எங்கள் கருத்துக்கு ஆணையம் சாதகமான முடிவை தரவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்.



இரு ஆண்டுகளுக்கு பழைய கட்டணம்


தமிழ்நாடு உணவு பொருள் வியாாபரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம்: தற்போது 'பீக் ஹவர்' 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக உயர்த்தப்பட்டதை திரும்ப பெற வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தாமல் 3 ஆண்டுகளுக்கு 6 சதவீதம் உயர்த்த வேண்டும். தமிழகத்தில் பல பகுதிகளில் குடியிருப்புக்கு வழங்கிய மின் இணைப்பிலேயே சிறு தொழில்கள் நடத்துகிறார்கள். இதை மின் வாரியம் கண்டறிந்தால் இழப்பை தவிர்க்கலாம்.

பெரு நிறுவனங்கள் சூரிய மின்சக்தி, காற்றாலையில் மின்சாரம் தயாரிப்பதால் செலவு குறைவு. சிறு, நடுத்தர தொழில்கள் அரசு மின்சாரத்தை நம்பி உள்ளது. எச்.டி., டிமான்ட் கட்டணங்கள் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.350 முதல் ரூ.600 உயர்த்தப்படவுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் நிலையில் 2 ஆண்டுகளுக்கு பழைய கட்டணம், பழைய டிமான்ட் சார்ஜஸ் தொடர வேண்டும்.



நிலை, பீக் ஹவர் கட்டணம் தவிர்க்கலாம்


அப்பளம், வடகம் மோர் வத்தல் சங்க தலைவர் திருமுருகன்: சிறு, குறு தொழில்களுக்கு நிலை கட்டணத்தை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.35ல் இருந்து ரூ.100 முதல் 600 வரை உயர்த்தியது மனசாட்சியற்ற செயல். அதிக கிலோவாட் மின் இணைப்பு பெற்ற நிறுவனங்கள் அதிக லாபத்தில் இயங்குகிறது என்ற கண்ணோட்டம் தவறு. மின் இணைப்பு பெறும் போது வைப்பு தொகை, மின் உபகரணங்கள் வாங்க, வளர்ச்சி கட்டணம் தவிர பல வகையில் பணம் பெறப்படுகிறது.

பிற பயனாளர்களுக்கு உயர்த்துவது போல் சிறு, குறு தொழில்களுக்கு யூனிட் 1க்கு 50 காசு மட்டுமே உயர்த்த வேண்டும். நிலையான,பீக் ஹவர் கட்டணங்களை தவிர்க்கலாம். மின் கட்டணத்தை உயர்த்தி சிறு தொழில்களை தமிழக அரசு அழித்துவிட வேண்டாம்.


latest tamil news





விளிம்பு மக்கள் பாதிக்கப்படுவர்


பா.ஜ., தொழிற்துறை பிரிவு - சீனிவாச பாஸ்கரன்: விவசாயத்திற்கு அடுத்து நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது சிறு, குறு தொழில்கள் தான். மின்கட்டண உயர்வால் நிறுவனங்கள் பெரும் நஷ்டம் அடையும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் துவங்க தயங்குவர். தி.மு.க., அரசு ஒரு பக்கம் 'இன்வெஸ்ட் இன் தமிழ்நாடு' என கூறிவிட்டு மறுபக்கம் கட்டணம் உயர்த்தி அவர்களை வரவிடாமல் செய்கிறது. விளிம்பு நிலை மக்கள் கடுமையாக பாத்திக்கப்படுவர். கட்டண உயர்வை பா.ஜ., கண்டிக்கிறது. தமிழக அரசு இந்த அறிவிப்பை கைவிடவேண்டும்.



கட்டண உயர்வை ஏற்க முடியாது


- மடீட்சியா முன்னாள் தலைவர் செல்வராஜ்: சிறு தொழில்களின் நிலையை உணர்ந்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட வேண்டும். ஒரு கிலோவாட்டுக்கு ரூ.35 என்பதை ரூ.100 முதல் ரூ.600 வரை உயர்த்தியதை ஏற்க முடியாது. தொழில் நடந்தாலும், நடக்காவிட்டாலும் முன்பு மாதம் ரூ. 3920 நிலை கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது 1714 சதவீதம் உயர்ந்து 62,700 வரை கட்டவேண்டி வரும். எனவே, கட்டண உயர்வை கைவிட வேண்டும்.



பெயரளவில் கருத்து கேட்பு


சவுராஷ்டிரா வர்த்தக சங்க செயலாளர் தினேஷ்: மின் கட்டண உயர்வு அறிவிப்பு சிறு, குறு தொழில் புரிவோருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்து கேட்பு கூட்டங்கள் பெயரளவில் தான் நடக்கிறது. எங்கள் கருத்துகளை அரசு பரிசீலனை செய்து, கட்டண உயர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

- கூட்டத்தில் தென்மாவட்ட மக்கள், தொழில் துறையினர் பங்கேற்றனர். தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி கருத்துக்களை கேட்டனர். 75 பேர் கருத்து தெரிவித்தனர். 1000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
19-ஆக-202218:04:57 IST Report Abuse
venugopal s மத்திய அரசின் பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி யும் கொடுக்காத பாதிப்பையா மின் கட்டண உயர்வு தொழில் துறைக்கு கொடுத்து விடப் போகிறது?
Rate this:
Cancel
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
19-ஆக-202215:58:36 IST Report Abuse
Thalaivar Rasigan திருட்டு மாடல் திராவிட மாடல்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
19-ஆக-202211:52:32 IST Report Abuse
raja மங்குனி அமைச்சரின் திருட்டு மாடல் அரசில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்....
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
19-ஆக-202213:37:58 IST Report Abuse
Dhurveshயார் யார் அதிகம் என்று எண்ணுகிறவர்கள் எந்த மாநிலத்தில் இந்த மாநிலம் விட குறைவா மின்சாரம் உள்ள மாநிலம் ஓடுங்கள் ,...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-202213:51:50 IST Report Abuse
Kasimani Baskaran"இந்த மாநிலம் விட குறைவா மின்சாரம் உள்ள மாநிலம் ஓடுங்கள்" - விரட்டாத குறை... அதையும் இந்த நாலனா + 25 எழுத்து உபிஸ் செய்து விட்டது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X