தோட்டக்கலை துறையில் மத்திய அரசின் மானியம்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவண பிரியா கூறியிருப்பதாவது:2022--23ம் நிதி ஆண்டில் மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற tnhorticulture.tn.gov.in/tnhornet என்ற இணைய வழியில் விவசாயிகளின் பெயர், முகவரி, ஆதார் விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். திட்டத்தை தேர்வு செய்து இனம், பயிர், விவசாயி போட்டோவை சமர்ப்பித்தபின், விவசாயி அலைபேசிக்கு

வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவண பிரியா கூறியிருப்பதாவது:2022--23ம் நிதி ஆண்டில் மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற tnhorticulture.tn.gov.in/tnhornet என்ற இணைய வழியில் விவசாயிகளின் பெயர், முகவரி, ஆதார் விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

திட்டத்தை தேர்வு செய்து இனம், பயிர், விவசாயி போட்டோவை சமர்ப்பித்தபின், விவசாயி அலைபேசிக்கு குறுஞ்செய்தி வரும். இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாதோர், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.உயர் விளைச்சல் தரும் காய்கறிகள், கொய்யா, மா, பப்பாளி பயிர்களின் பரப்பு அதிகரித்தல், அங்கக பண்ணையம், தேனி வளர்ப்பு, நிழல் வலைக்குடில், வெங்காய சேமிப்பு அறை, வாழை, தென்னையில் ஊடுபயிராக காய்கறி, கவாத்து கத்தி, முகப்பு விளக்கு, விசைத்தெளிப்பான்கள் போன்றவை மானியத்தில் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் மானிய திட்டங்களை பெற்று பயன்பெறலாம், எனக்கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X